Breaking News

அமெரிக்காவிற்கு எதிராக புதிய ஸ்டீல்த் நியூக்ளியர் குண்டுவீசு விமானத்தை மேம்படுத்தும் இரஷ்யா-ஆச்சரிய தகவல்கள்

  • Tamil Defense
  • May 26, 2020
  • Comments Off on அமெரிக்காவிற்கு எதிராக புதிய ஸ்டீல்த் நியூக்ளியர் குண்டுவீசு விமானத்தை மேம்படுத்தும் இரஷ்யா-ஆச்சரிய தகவல்கள்

இரஷ்யாவின் ஐந்தாம் தலைமுறை விமானமான சு-57 விமானம் படையில் இணைக்கப்பட்டதை அடுத்து பாக் டிஏ எனப்படும் புதிய ஸ்டீல்த் குண்டுவீசு விமானத்தை இரஷ்யா மேம்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இரஷ்யா தற்போது தனது இராணுவத்தை வேகமான முறையில் நவீனப்படுத்தி வருகிறது. Perspective Aviation Complex for Long-Range Aviation (PAK DA) எனும் திட்டத்தின் கீழ் தற்போது இந்த புதிய குண்டுவீசு விமானத்தை மேம்படுத்தி வருகிறது.இது இரஷ்யாவின் இரண்டாவது ஸ்டீல்த் தொழில்நுட்பம் தொடர்பான தயாரிப்பு ஆகும்.இந்த விமானம் தற்போது இரஷ்ய படையில் உள்ள டுபொலேவ் 22, டியு-95 மற்றும் டியு-160 குண்டுவீசு விமானங்களுக்கு மாற்றாக படையில் இணையும்.

2021 வாக்கில் இந்த விமானத்திற்கான ஏர்பிரேம் வெளியாகும் என இரஷ்ய மீடியா தகவல் வெளியிட்டுள்ளது.

பாக் டிஏ குண்டுவீசு விமானம் அதிநவீன தொழில்நுட்பங்களை பெற்றிருக்கும்.ரேடாரில் இருந்து தப்ப தேவையான தொழில்நுட்பங்களையும் பெற்றிருக்கும்.இந்த விமானம் சப்சோனிக் வேகத்தில் தான் இயங்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.ஆனால் தற்போது இரஷ்யாவிடம் இருக்கும் Kh-47M கின்ஷால் ஹைப்பர்சோனிக் ஏவுகணை உட்பட அனைத்து வான் ஏவு க்ரூஸ் ஏவுகணைகளையும் சுமந்து சென்று வீசும் வண்ணம் வடிவமைக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

2021 இறுதி அல்லது 2022 தொடக்கத்தில் இந்த விமானத்தின் முதல் பறப்பு சோதனை நிகழ உள்ளது.2028 இறுதிக்குள் விமானத்தை படையில் இணைப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன.