சிக்கிமில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு இறுதி மரியாதை செலுத்தப்பட்டது

  • Tamil Defense
  • May 17, 2020
  • Comments Off on சிக்கிமில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு இறுதி மரியாதை செலுத்தப்பட்டது

லெப் கலோ உட்பட எல்லையில் வீரமரணம் அடைந்த இரு வீரர்களுக்கும் இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.

வடக்கு சிக்கிமில் பனி அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த வீரர்கள் குழு மீது பனிச்சரிவு ஏற்பட்டதில் லெப் கலோ உட்பட இரு வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.இந்தச் சம்பவம் நாடு முழுதும் சோகத்தை ஏற்படுத்தியது.

லெப்டினன்ட் கலோனல் ரோபெர்ட் டிஏ மற்றும் சாப்பர் சபலா சன்முக ராவ் ஆகிய இரு வீரர்களும் பனிச்சரிவில் சிக்கி வீரமரணம் அடைந்தனர்.

வடக்கு சிக்கமில் பனியை அகற்றும் பணியில் வீரர்கள் குழு ஈடுபட்டுக்கொண்டிருந்த போது இந்த துரதிர்ஷ்ட சம்பவம் நிகழ்ந்தது.

பனியில் சிக்கிய மற்ற 18 வீரர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு தற்போது அவர்கள் நலமுடன் இருப்பதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு தற்போது இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.