இந்திய மற்றும் பாகிஸ்தானுடைய அணுசக்தி அமைப்புகள் கொள்முதல் அதிகரிப்பு !!

  • Tamil Defense
  • May 1, 2020
  • Comments Off on இந்திய மற்றும் பாகிஸ்தானுடைய அணுசக்தி அமைப்புகள் கொள்முதல் அதிகரிப்பு !!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் சர்வதேச சட்டங்களில் உள்ள சாதகங்களை பயன்படுத்தியும், ஓட்டைகளை பயன்படுத்தியும் பன்மடங்கு அதிக அளவில் அணுசக்தி சார் அமைப்புகள் மற்றும் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி உள்ளன.

கார்னெஜி கார்ப்பரேஷன் மற்றும் விஸ் ஃபவுன்டேஷன் ஆகியவை நிதி வழங்கும் சி4ஏடிஎஸ் எனும் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கைகளால் சர்வதேச சட்ட ஒழுங்கு அமைப்புகள் விசாரணையை தொடங்கி உள்ளன.

பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் மற்றும் ராணுவம் இதுகுறித்து பேச மறுப்பு தெரிவித்து உள்ளன மேலும் இந்திய பிரதமர் அலுவலகமும் மவுனம் காத்து வருகிறது.

இந்த அமைப்பு சுமார் 125மில்லியன் தரவுகளை ஆய்வு செய்து, பொது வர்த்தகம் மற்றும் டென்டர் தரவுகளை எடுத்துள்ளது.

பாகிஸ்தான் சுமார் 113சப்ளையர்கள் மூலமாக பல்வேறு தொழில்நுட்ப அமைப்புகளை பெற்றுள்ளது மேலும் ஆய்வு செய்த போது ஹாங்காங், சிங்கப்பூர் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஊள்ளிட்ட நாடுகளிலும் சுமார் 46 சப்ளையர்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் இந்தியாவுடன் சுமார் 222 சப்ளையர்கள் தொழில் செய்து உள்ளன, இதில் 86 நிறுவனங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட இந்திய அணுசக்தி அமைப்புகளுடன் வர்த்தகம் மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிறுவனங்கள் அனைத்துமே ஜப்பான் மற்றும் அமெரிக்காவால் பட்டியலிடப்பட்டவை ஆகும்.

இரு நாடுகளும் தலா 150க்கும் மேற்பட்ட அணு ஆயுதங்களை வைத்துள்ளன என்பது இங்கு குறிப்பிடத்தகும்.