உதிரி பாகங்கள் சப்ளை நிறுத்தம் பாதிப்பில் இந்திய விமானப்படை !!

  • Tamil Defense
  • May 14, 2020
  • Comments Off on உதிரி பாகங்கள் சப்ளை நிறுத்தம் பாதிப்பில் இந்திய விமானப்படை !!

இந்திய விமானப்படை தனது பல்வேறு விமானங்களுக்கான உதிரி பாகங்கள் வந்து சேராத காரணத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக மூத்த விமானப்படை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் நிறுவனம் தயாரித்து வழங்கிய விமானங்களுக்கான உதிரி பாகங்களின் சப்ளை தடைபட்டதால் பராமரிப்பு பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கு காரணமாக ஊரடங்கின் போது போக்குவரத்து நிறுத்தம் மற்றும் வேலைநிறுத்தம் ஆகியவை கூறப்படுகிறது.

சமீபத்தில் தான் அத்தியாவசிய சேவைகள் பிரிவின் கீழ் ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் நிறுவனம் சிறப்பு அனுமதி பெற்று பணிகளை துவங்கி உள்ளது. ஆரம்ப கட்டமாக ஏற்கனவே ஸ்டாக்கில் இருந்த உதிரி பாகங்கள் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் உடனே தேவைக்கான தயாரிப்பு பணிகளும் துவங்கி உள்ளன.

அதே போல் சில மேற்கு நாடுகள் மற்றும் ரஷ்யாவில் இருந்து விமானங்களுக்கான ஒரிஜினல் உதிரி பாகங்கள் வரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக பல நாடுகளில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டு தொழிற்சாலைகள் முடப்பட்டுள்ளதும் இதற்கு ஒரு காரணமாகும்.

ஆனால் தற்போது வரை இந்திய விமானப்படையின் தரார்நிலை பாதிக்கப்படவில்லை என்றும் நாள்தோறும் கண்காணிப்பு, மருத்துவ பொருட்கள் போக்குவரத்து மற்றும் வழக்கமான பணிகளை விமானப்படை தங்கு தடையின்றி மேற்கொண்டு வருவதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.