1) தேஜாஸ் என்பது இலகுரக போர் விமானமாகும், அதே நேரத்தில் மற்றவை நடுத்தர வகுப்பை சேர்ந்த பல்திறன் போர் விமானங்கள் ஆகும்.
2) இந்த நடுத்தர ரக விமானங்களின் பல்திறன் காரணமாக தாக்குதல், இடைமறிப்பு, எதிரி வான் பாதுகாப்பு அமைப்புகளை அடக்குதல், நெருங்கிய பாதுகாப்பு போன்ற பணிகளை மேற்கொள்ள முடியும் ஆனால் தேஜாஸ் இலகுரக விமானம் ஆகையால் அதனால் இயற்கையாகவே குறைந்த அளவு ஆயுதத்தையும் எரிபொருளையும் மட்டுமே கொண்டு செல்ல முடியும் அதனால் இத்தகைய பணிகளை மேற்கொள்வது சாத்தியமில்லை.
3) தேஜாஸ் மார்க்2 இந்த தேவையை பூர்த்தி செய்யும் என பலர் கூறலாம், ஆனால் இலகுரக தேஜாஸில் இருந்து தேஜாஸ் மார்க்2 முற்றிலும் மாறுபட்ட புதிய நடுத்தர பல்திறன் போர் விமானம் ஆகும் அதனால் 2028 ஆண்டுவாக்கில் தான் படையில் இணையும் அதுவரை காலம் தாழ்த்த முடியாது காரணம் நமக்கு உடனடியாக நடுத்தர விமானங்கள் தேவைப்படுகிறது.
4)கூடுதலாக 36ரஃபேல், 21 மிக்29, 12 சுகோய்30 விமானங்களை நாம் உடனடியாக வாங்கலாம் இது நமது உடனடி தேவையை பூர்த்தி செய்யும். இவற்றுடன் நாம் இந்த 114 நடுத்தர பல்திறன் போர் விமானங்களுக்கான ஒப்பந்தத்தை செயல்படுத்தினால் நல்லது.
5) விரைவில் 6 ஸ்க்வாட்ரன் ஜாகுவார் மற்றும் 6 ஸ்க்வாட்ரன் மிக்21 விமானங்கள் ஒய்வு பெற உள்ளன ஆகவே தேஜஸ் ஒப்பந்தத்தையும் இந்த ஒப்பந்தத்தையும் ஒரு சேர செயல்படுத்துவது நல்லது.
பணம் இதற்கு தடையாக இருக்காது, சமீப காலங்களில் விமானப்படை போர் விமானங்களை விட மற்ற தளவாடங்களை வாங்குவதில் அதிக பணத்தை செலவிடுகிறது.
ஆகவே ணத்தை சரிசமமாக செலவு செய்தால் கொள்முதல் சீராக இருக்கும்.
உதாரணமாக வருடத்திற்கு 3 பில்லியன் டாலர்களை போர் விமானங்களுக்கும், 3 பில்லியன் டாலர்களை பிற தளவாடங்களை வாங்குவதற்கும் பயன்படுத்தி கொள்ளலாம்.