இஸ்ரோ நிறுவனத்தின் கட்டமைப்புகளை தனியார் நிறுவனங்கள் பயன்படுத்தி கொள்ள அனுமதி !

  • Tamil Defense
  • May 17, 2020
  • Comments Off on இஸ்ரோ நிறுவனத்தின் கட்டமைப்புகளை தனியார் நிறுவனங்கள் பயன்படுத்தி கொள்ள அனுமதி !

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார சீரமைப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக நேற்று பல்வேறு சீர்திருத்தங்களை அறிவித்தார்.

அதன்படி விண்வெளி ஆராய்ச்சி, செயற்கைகோள்கள், ராக்கெட்டுகள் தயாரிப்பு போன்றவற்றில் தனியார் பங்களிப்பை அதிகபடுத்தும் வகையில் அனுமதி அளிக்கப்படும் என தெரிவித்தார்.

விண்வெளி ஆராய்ச்சியில் தனியார் நிறுவனங்களுக்கும் சம வாய்ப்பு அளிக்கப்படும் எனவும் அவர் உறுதி அளித்துள்ளார். இதன் காரணமாக இஸ்ரோவின் உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப வசதிகளை தனியார் நிறுவனங்கள் பயன்படுத்தி கொள்ளலாம் எனவும் குறிப்பிட்டார்.

மேலும் எதிர்காலத்தில் கோள்கள் ஆராய்ச்சி, பயணம் மற்றும் விண்வெளி சுற்றுலா போன்றவையும் தனியார் துறைகளின் பயன்பாட்டிற்கு விடப்படும் எனவும் தெரிவித்தார்.

இஸ்ரோவின் கட்டமைப்புகளை பயன்படுத்தி கொள்ள அனுமதி அளிப்பதில் (ஏவுதளத்தை தவிர) எமக்கு உடன்பாடு இல்லை. தனியார் நிறுவனங்கள் ஆராய்ச்சிகளை அவர்களே மேற்கொள்வதே சிறப்பு.