தரைப்படையின் தள பணிமனைகளை தனியார் நிறுவனங்கள் இயக்கலாம் !!

  • Tamil Defense
  • May 18, 2020
  • Comments Off on தரைப்படையின் தள பணிமனைகளை தனியார் நிறுவனங்கள் இயக்கலாம் !!

இந்திய தரைப்படை தனது டி72 மற்றும் டி90 ரக டாங்கிகளை சரி செய்யும் பணியை தனியாருக்கு ஒப்பந்தம் அடிப்படையில் அளிக்க உள்ளது.

கடந்த 2017ஆம் ஆண்டிலேயே இதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டபோது பதிவு செய்திருந்தோம்.
தற்போது தில்லியில் உள்ள 505ஆவது தள பணிமனையை எப்படி இயக்குவீர்கள் என கருத்து கேட்பதை தரைப்படை துவங்கி உள்ளது.

இந்த 505ஆவது தள பணிமனை வருடம் ஒன்றிற்கு 70 டி72 டாங்கிகளை முற்றிலும் சரி செய்யும் திறன் கொண்டவை, இந்த நிதியாண்டில் இருந்து டி90 டாங்கிகளை சரி செய்யும் பணியை துவங்க உள்ளது.

இந்த நடவடிக்கை லெஃப்டினன்ட் ஜெனரல் ஷெகட்கர் கமிட்டியுடைய பரிந்துரை அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் தரைப்படையின் தயார்நிலை பாதிக்கப்படாமல் இருக்கும் வகையில் நாடு முழுவதும் 8 தற பணிமனைகள் துவங்க பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.