திட்டம் தயார்,நேரம் வரும் போது அதிரடி தான்-பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்து முன்னாள் தளபதி பேச்சு

  • Tamil Defense
  • May 10, 2020
  • Comments Off on திட்டம் தயார்,நேரம் வரும் போது அதிரடி தான்-பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்து முன்னாள் தளபதி பேச்சு

முன்னாள் இராணுவ தளபதியும் தற்போதைய மத்திய அமைச்சருமான விகே சிங் அவர்கள் ஆஜ் டாக் தொலைக்காட்சியில் பேசிய போது இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

முழு காஷ்மீரும் இந்தியாவினுடையது என அவர் கூறியுள்ளார்.பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரும் இந்தியாவினுடையது தான்.விரைவில் அது இந்தியாவுடையதாக மாறும் என கூறியுள்ளார்.

கில்கிட் பல்டிஸ்தான் பகுதியில் நடைபெற உள்ள தேர்தல் பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர் “பாக் ஆட்சியாளர்களால் அவர்களுடைய சொந்த நாட்டையே ஆளமுடியவில்லை,இராணுவமே முடிவுகள் எடுக்கிறது.மற்றும் அங்குள்ள மக்கள் அங்கிருந்து பிரியவே காத்துள்ளனர்” என தெரிவித்துள்ளார்.

பாக்கிற்கு எந்த உலக நாடும் துணை நிற்காது.ஆனால் இந்தியாவிற்கோ அப்படி இல்லை.பல நாடுகளுடன் நல்ல உறவு உள்ளது.கடைசியில் நாம் விரும்பியது நமக்கு கிடைக்கும் என அவர் பேசியுள்ளார்.

நேரம் வரும் போது அது தானாக நடக்கும் என அவர் பேசியுள்ளார்.ஆனால் எப்போது எப்படி என அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார்.

வாய்ப்புக்காக காத்திருக்கிறது இந்தியா.நேரம் வரும் போது அது நடக்கும்.அதற்கான திட்டம் தயாராகவே உள்ளது என அவர் கூறியுள்ளார்.