
இன்று பாகிஸ்தான் ராணுவம் எல்லை கட்டுபாட்டு கோடருகே இரண்டு இடங்களில் துப்பாக்கி சூடு மற்றும் மோர்ட்டார்களை கொண்டு இந்திய ராணுவ நிலைகளை தாக்கி உள்ளது.
இந்த சம்பவம் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள தேக்வார் மற்றும் கிர்னி செக்டார்களில் நிகழ்ந்துள்ளது.
இதனையடுத்து இந்திய வீரர்களும் பாகிஸ்தான் ராணுவத்திற்கு தகுந்த பதிலடி கொடுத்துள்ளதாக இந்திய ராணுவ வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.