தனது வலிமையை பொறுமையாக ஆனால் சீராக அதிகரித்து வரும் பாக் கடற்படை !!

  • Tamil Defense
  • May 20, 2020
  • Comments Off on தனது வலிமையை பொறுமையாக ஆனால் சீராக அதிகரித்து வரும் பாக் கடற்படை !!

பாகிஸ்தான் கடற்படை நீண்ட காலமாக புதிய தளவாடங்களை சேர்ப்பதில் நாட்டம் கொண்டு இருந்தது.

தற்போது பல்வேறு ஒப்பந்தங்களை பாக் கடற்படை மேற்கொண்டுள்ளது.
அந்த பட்டியலை கீழே காணலாம்.

1) துருக்கியின் ப்ராஜெக்ட் மில்கெம் (4 அடா ரக ஸ்டெல்த் கார்வெட் கப்பல்கள்)

2) 4 – ஜிங்காய் 2 ரக சீன கார்வெட் கப்பல்கள்

3) 8 ஹங்கோர் ரக நீர்மூழ்கிகள் சீனாவிடம் இருந்து,

4) சீன உதவியுடன் பாகிஸ்தான் கடற்படைக்கு ஒரு அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கி.

குறைந்த நிதியில் பல்வேறு தளவாடங்களை பாகிஸ்தான் கடற்படை வாங்கி வருகிறது, நிச்சயமாக தெற்காசியாவில் பாகிஸ்தான் கடற்படையின் வலிமையை இந்த நடவடிக்கைகள் அதிகரிக்கும் என்பதில் ஐயமில்லை.

அதனால் நமது கடற்படையின் கொள்முதல் அதிகரிக்க வேண்டும், உள்நாட்டு கப்பல் கட்டுமான திறன் வேகம் எடுக்க வேண்டும். தரமும் எண்ணிக்கையும் ஒரு சேர அதிகரித்தல் வேண்டும். இனியும் தாமதம் நமக்கு ஆபத்தை விளைவிக்கும்.