இந்திய மண்ணில் பயங்கரவாத தாக்குதல் நடத்த பாக் அச்சப்பட வேண்டும் இந்திய விமானப்படை தளபதி !!

இந்திய விமானப்படை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் பதவ்ரியா அவர்கள் சமீபத்தில் அளித்த பேட்டியில் எப்போதெல்லாம் இந்திய மண்ணில் பயங்கரவாத தாக்குதல் நடைபெறுகிறதோ அப்போதெல்லாம் பாகிஸ்தான் அச்சப்பட வேண்டும் என கூறியுள்ளார். மேலும் இந்திய மண்ணில் பயங்கரவாதிகளையும், பயங்கரவாதத்தையும் ஊக்குவிப்பதை பாகிஸ்தான் நிரந்தரமாக நிறுத்த வேண்டும்.

மேலும் அவர் கூறுகையில் இந்திய ராணுவம் அரசு விரும்பினால் தாக்குதல் நடத்த முழு அளவில் தயாராக உள்ளது எனவும், இந்திய விமானப்படை எல்லை தாண்டி தாக்குதல் நடத்துமா என கேட்டதற்கு இந்திய விமானப்படை 24*7 மணி நேரமும் தயாராக உள்ளதாக தெரிவித்தார்.

கடந்த 2018ஆம் ஆண்டு புல்வாமாவில் நடைபெற்ற தாக்குதலில் 40 மத்திய ரிசர்வ் காவல படை வீரர்கள் கொல்லப்பட்டதற்கு இந்திய விமானப்படை ஜெய்ஷ் இ மொஹம்மது முகாம் மீது தாக்குதல் நடத்தி பதிலடி கொடுத்தது குறிப்பிடத்தக்கது.