
நேற்று காலை ஆஃப்கானிஸ்தானில் இருவேறு தாக்குதல்களில் 40
பேர் கொல்லப்பட்டனர்.
தலைநகர் காபூலில் உள்ள ஒரு மருத்துவமனையில் காவல்துறையினரை போன்று வேடமிட்ட பயங்கரவாதிகள் புகுந்து பிரசவ வார்டில் நடத்திய துப்பாக்கி சூட்டில் பிறந்து சில மணி நேரமே ஆன குழந்தைகள் அக்குழந்தைகளின் தாய்மார்கள் உட்பட 16 பேர் கொடுரமாக கொல்லப்பட்டுள்ளனர்.
இரண்டாவது தாக்குதல் நங்கர்ஹார் மாகாணத்தில் காவல்துறை அதிகாரி ஒருவரின் இறுதி சடங்கில் நடத்திய தற்கொலை தாக்குதலில் 24 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதல் ஜியா உல் ஹக் உள்ளிட்ட மூன்று முக்கிய பயங்கரவாதிகளை ஆஃப்கன் பாதுகாப்பு படையினர் கைது செய்த காரணத்தால் பழிவாங்கும் நோக்கில் நடத்தப்பட்டுள்ளது.
ஆஃப்கன் மற்றும் இந்திய பயங்கரவாத ஒழிப்பு அதிகாரிகள் இதில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகம் தெரிவித்த நிலையில் மருத்துவமனையில் இருந்து பாகிஸ்தான் ஆயுத தொழிற்சாலை வாரியம் தயாரித்த துப்பாக்கி மற்றும் முதுகுப்பை ஆகியவை கைப்பற்ற பட்டுள்ளன.
இவற்றகன் புகைப்படம் வெளியிடப்பட்டு உள்ளது.
ஈவிரக்கமின்றி பச்சிளம் குழந்தைகள், தாய்மார்கள், தாதியர்கள் போன்றோரின் மரணத்திற்கு காரணமான இந்த தாக்குதல்களை இந்தியா வன்மையாக கண்டித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.