
காஷ்மீரில் நடைபெற்று முடிந்த ஹேன்ட்வாரா பயங்கரவாத தாக்குதலில் நாம் ஐந்து வீரர்களை இழந்தோம்.இதனால் இந்தியா பாக் மீது கடும் கோபத்தில் தற்போது உள்ளது.
இதனால் இந்தியா தாக்ககூடும் என்ற பயத்தில் பாக் தொடர்ந்து வான் ரோந்து பணிகளில் தனது விமானங்களை ஈடுபடுத்தி வருகிறது.
ஹேண்ட்வாரா என்கௌன்டர் நடைபெற்றது முதலே பாக் வான் பயிற்சிகளை தொடங்கிவிட்டது என இந்தியாவிற்கு தகவல் கிடைத்துள்ளது.
தனது எப்-16 மற்றும் ஜேஎப்-17 விமானங்களின் உதவியுடன் தொடர்ந்து வானில் கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறது.
மேலும் இந்தியா தவறான காரணத்திற்கான பாகிஸ்தானை தாக்க கூடும் என தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்திருந்தார்.
இந்தியா எங்கள் மீது தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளது என நாங்கள் உலகத்தை எச்சரிக்கிறோம் என அவர் கூறியிருந்தார்.
இந்தியா தாக்கலாம் என்ற காரணத்தால் தான் பாக் வான் ரோந்து பணிகளை அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஒரு முறை ஒரே சமயத்தில் ஆறு அவாக்ஸ் விமானங்களையும் தனது எல்லையை ஒட்டி பாக் பறக்க செய்து கண்காணிப்பு பணியை செய்தது.