
தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரான்ட் என்ற புதிய பயங்கரவாத குழுவை காஷ்மீரில் பாகிஸ்தான் உருவாக்கியுள்ளதாக இராணுவ தளபதி நரவனே கூறியுள்ளார்.
பாகிஸ்தானில் உள்ள ஐஎஸ்ஐ வழிகாட்டுதல் படி காஷ்மீரில் பயங்கரவாத சம்பவங்களை இந்த அமைப்பு தொடங்கியுள்ளது என அவர் கூறியுள்ளார்.
இதை நான் டெடர் ரிவைல் ப்ரான்ட் என அழைப்பேன்.மற்றும் ஒரு பெயரில் மற்றும் ஒரு பயங்கரவாத குழு.எல்லைக்கு அப்பால் உள்ளவர்களின் துணையுடன் இயங்குகிறது.இதை தகுந்த முறையில் நாங்கள் எதிர்கொள்வோம் என தளபதி கூறியுள்ளார்.
மேலும் காலநிலை மாறி வருவதால் அதைப் பயன்படுத்தி எல்லையில் ஊடுருவல் அதிகமாக உள்ளதால் காஷ்மீரில் தற்போது பயங்கரவாத சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் பிரச்சனையை உலகின் கவனத்திற்கு கொண்டு செல்ல பாகிஸ்தான் இது போன்ற செயல்களை அரங்கேற்றி வருகிறது என அவர் கூறியுள்ளார்.இதை நாங்கள் கவனத்தில் கொண்டுள்ளதாகவும் இதை எந்த நிலையிலும் எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.