கில்ஜிட் பல்டிஸ்தானில் சீன உதவியுடன் அணை அமைக்கும் பாக்-இந்தியா கடும் எதிர்ப்பு

  • Tamil Defense
  • May 15, 2020
  • Comments Off on கில்ஜிட் பல்டிஸ்தானில் சீன உதவியுடன் அணை அமைக்கும் பாக்-இந்தியா கடும் எதிர்ப்பு

கில்கில் பல்டிஸ்தான் பகுதியில் சீனா மற்றும் பாக் இணைந்து பெரிய ஹைட்ரோபவர் ப்ளான்ட் அமைக்க உள்ளதற்கு இந்தியா தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது.

இதற்காக சீனா பவர் மற்றும் பாக் இராணுவத்தின் கமர்சியல் கிளையான ப்ரான்டியர் ஓர்க்ஸ் ஆர்கனிசேசன் இணைந்து 442 பில்லியன் ரூபாய் அளவிலான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

இதில் 70% பங்கு சீன நிறுவனத்திடமும் 30% பங்கு பாக் இராணுவ நிறுவனத்திடமும் இருக்கும்.இன்னும் இரு வாரத்தில் இதற்கான கட்டுமானம் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதற்கு இந்திய தரப்பில் பேசியுள்ள வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் அனுரக் ஸ்ரீவஸ்தவா அவர்கள் , கில்கிட் பல்டிஸ்தான் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி ஆகும்.இது பாகிஸ்தானால் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.

மொத்த ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் பிராந்தியங்கள் இந்தியப் பகுதிகளாக இருந்தன.இனி எப்போதும் அவை இந்திய பகுதிகளாகவே இருக்கும் என தெரிவித்துள்ளார்.

இந்திய பகுதியில் சட்டவிரோதமாக நடக்கும் இது போன்ற செயல்களுக்கு எப்போதும் நாங்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளோம் என அவர் கூறியுள்ளார்.