
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டம் மேந்தார் செக்டாரில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியும், மோர்ட்டார்கள் கொண்டு தாக்கியும் உள்ளனர்.
இந்த தாக்குதலில் இரு வீடுகள் கடுமையான சேதம் அடைந்துள்ளன, மேலும் கோலாட் கிராமத்தை சேர்ந்த மொஹம்மது யாசின் என்பவர் காயமடைந்துள்ளார்.
இந்த தாக்குதல் அதிகாலை 3.20 மணிக்கு தொடங்கி சுமார் இரண்டு மணி நேரம் வரை நீடித்துள்ளது. சனிக்கிழமை அன்றும் இரண்டு செக்டார்களில் பாக் அத்துமீறி தாக்குதல் நடத்தி உள்ளது.
இந்திய ராணுவம் இதற்கு தகுந்த பதிலடி அளித்து வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.