
பாகிஸ்தான் அரசு மருத்துவ பொருட்கள் மற்றும் மருந்து தயாரிப்பதற்கான மூலப்பொருட்களை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்ய விதித்திருந்த தடையை விலக்கி கொண்டது.
தற்போது பாகிஸ்தான் பி1,பி2,பி6,பி12,டி3, ஸின்க் ஸல்ஃபேட் மோனோஹைட்ரேட், மருத்துவ உப்பு போன்ற பொருட்களையும் போலியோ, காசநோய் ஆகியவற்றிற்கான தடுப்பு ஊசிகளையும் டிடி போன்ற மருந்து பொருட்களையும் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்கிறது.
ஆனால் இவற்றிற்கு எல்லாம் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யபட்ட பின்னர் பாகிஸ்தான் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.