ஆப்கன் மருத்துவமனை தாக்குதல் ; பாக் தயாரிப்பு துப்பாக்கி மற்றும் பேக் கண்டெடுப்பு

  • Tamil Defense
  • May 13, 2020
  • Comments Off on ஆப்கன் மருத்துவமனை தாக்குதல் ; பாக் தயாரிப்பு துப்பாக்கி மற்றும் பேக் கண்டெடுப்பு

ஆப்கனில் தாக்குதலுக்கு உள்ளான மருத்துவமனை அருகே பாக் தயாரிப்பு துப்பாக்கி மற்றும் பேக் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

ஆப்கனில் நடைபெற்ற இரு வேறு பயங்கரவாத தாக்குதல்களில் பிறந்த குழந்தைகள் உட்பட 40 பேர் உயிரிழந்துள்ளனர்.கிட்டத்தட்ட 70க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

ஆப்கன் தலைவர் ஆஷ்ரப் கானி அவர்கள் தலிபன் மற்றும் இஸ்லாமிக் ஸ்டேட் பயங்கரவாதிகள் தான் இதற்கு காரணம் என குற்றம்சாட்டியுள்ளார்.

காபூலில் உள்ள ஒரு மருத்துவமனை மற்றும் நான்கர்கஹரில் ஒரு இறுதிசடங்கில் என இரு இடங்களில் இந்த குண்டுவெடிப்பு நடைபெற்றுள்ளது.

தற்காப்பு என்ற நிலையில் இருந்து தாக்குதல் என்ற நிலைக்கு செல்லுமாறு ஆப்கன் பாதுகாப்பு படைகளை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை தொடங்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.

அமைதி தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்ததால் ஆப்கன் படைகள் எதிர்தாக்குதல் நடத்தாமல் தற்காப்பு என்ற நிலையில் மட்டுமே இருந்தனர்.

முதல் தாக்குதலை மூன்று பேர் கொண்ட பயங்கரவாத குழு காபுல் மருத்துவமனையில் நடத்தியுள்ளது.இதில் இரு குழந்தைகளுடன்  14 பேர் உயிரிழந்தனர்.15 பேர் காயமடைந்தனர்.

டேஷ் பயங்கரவாத குழு ஷியா பிரிவு இஸ்லாமியர்களை குறிவைத்தே இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இரண்டாவது தாக்குதல் நன்கர்ஹரில் நடைபெற்ற இறுதிச்சடங்கில் நடைபெற்றுள்ளது.இந்த தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.60 பேர் காயமடைந்தனர்.