“இந்தியாவின் மீது போர் தொடுங்கள்” பாக் பிரதமரிடம் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பிரதமர் கோரிக்கை

  • Tamil Defense
  • May 12, 2020
  • Comments Off on “இந்தியாவின் மீது போர் தொடுங்கள்” பாக் பிரதமரிடம் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பிரதமர் கோரிக்கை

இந்தியாவை படைகள் கொண்டு தாக்குமாறு பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் பிரதமர் பாக் பிரதமர் இம்ரானிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.கடுமையான பதிலடி கொடுக்க வேண்டிய தருணம் இது தான் என அவர் பாக் பிரதமருக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார்.

வெறும் பேச்சுகள் வேலை செய்யாது எனவும் தாக்குதலே நல்ல பாடமாக அமையும் என பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பிரதமர் கூறியுள்ளார்.

செவ்வாய் அன்று இந்த கோரிக்கையை பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பிரதமர் ராஜா பரூக் ஹைதர் இம்ரானிடம் வலியுறுத்தியுள்ளார்.

இந்தியா பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் காலைநிலையை அறிவித்து வரும் வேளையில் நாம் டெல்லியின் காலநிலையை அறிவிக்க வேண்டிய தருணம் இது தான் என கூறியுள்ளார்.