
சத்திஸ்கரின் பஸ்தர் பகுதயில் நடைபெற்ற மோதலில் ஒரு சிஆர்பிஎப் வீரர் வீரமரணம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மதியம் 2.15 அளவில் பிஜப்பூர் மாவட்டத்தின் உரிப்பால் கிராமம் அருகே இந்த சண்டை நடைபெற்றதாக காவல்துறை தகவல் வெளியிட்டுள்ளது.
சிஆர்பிஎப் 170 பட்டாலியனைச் சேர்ந்த முன்னா யாதவ் என்ற வீரர் வீரமரணம் அடைந்துள்ளார்.
ஞாயிறு அன்று இரவு சிஆர்பிஎப் படையின் சிறப்பு படை மற்றும் மாநில காவல் துறையின் மாவட்ட ரிசர்வ் படை இணைந்த சிறப்பு குழு ஒன்று ஆபரேசன் தொடங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
குறிப்பிட்ட படைப்பிரிவு இன்னும் காடுகளுக்குள் இருப்பதால் மேலதிக தகவல்கள் ஏதும் இல்லை டிஜிபி அலுவலகம் கூறியுள்ளது.
கடந்த வெள்ளி அன்று சத்திஸ்கர் காவல் துறையின் துணை ஆய்வாளர் ஒருவர் வீரமரணம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.