இந்திய விமானப்படைக்கு விரைவில் அடுத்த தலைமுறை பிரம்மாஸ் !!

  • Tamil Defense
  • May 11, 2020
  • Comments Off on இந்திய விமானப்படைக்கு விரைவில் அடுத்த தலைமுறை பிரம்மாஸ் !!

பிரம்மாஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் தலைவமை அதிகாரி முனைவர் சுதீர் குமார் மிஷ்ரா ஆன் மனோரமா எனும் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் ” இந்திய விமானப்படை நீண்ட தூரம் செல்லக்கூடிய பெரிய ஏவுகணைகளை தனது சுகோய் விமானங்களில் இணைக்கும் பொறுப்பினை தந்தது.

நாங்களும் அந்த சவாலை ஏற்றுக்கொண்டு விமானத்தை முதலில் உருமாற்றம் செய்தோம். அதன் ஏவியானிக்ஸ் நவீனபடுத்தப்பட்டது, அதன் உடலமைப்பு பலப்படுத்தப்பட்டது. மேலும் ஏவுகணையின் எடை 2.9 டன்களில் இருந்து 2.5 டன்கள் ஆக குறைக்கப்பட்டது.

சுகோய்30 விமானத்தின் 3000கிமீ இயக்க வரம்பு+ பிரம்மாஸ் ஏவுகணையின் 300கிமீ தாக்குதல் வரம்பு+ நடுவானில் எரிபொருள் நிரப்பும் வசதி ஆகியவை இன்றைய காலகட்டத்தில் இதனை உலகின் சிறந்த ஆயுத அமைப்புகளில் ஒன்றாக மாற்றுகிறது. இது இந்திய விமானப்படை விமானிகளுக்கு மிகப்பெரிய பலத்தை அளிக்கிறது அவர்களும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

இதனையடுத்து தற்போது அடுத்த தலைமுறைக்கு பிரம்மாஸ் ஏவுகணை திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இந்த ஏவுகணையை தேஜாஸ் மார்க்1, மார்க்1ஏ , சுகோய்30 மற்றும் ஆம்கா ஆகிய விமானங்களில் பொருத்த முடியும். இந்த ஏவுகணை இன்னும் நான்கு வருடங்களில் செயல்பாட்டுக்கு வரும் என்றார்.

மேலும் பிரம்மாஸ் ஏவுகணையின் ஹைப்பர்சானிக் வடிவம், ஏவாக்ஸ் எதிர்ப்பு வடிவம் , முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களின் பெயரில் ஒரு ஹைப்பர்சானிக் ஏவுகணை ஆகியவற்றின் திட்டங்களும் உள்ளதாக தெரிவித்தார்.