சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு பின்னர் புதிய லடாக் காவல்துறை உருவாக்கம் !!

  • Tamil Defense
  • May 24, 2020
  • Comments Off on சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு பின்னர் புதிய லடாக் காவல்துறை உருவாக்கம் !!

கடந்த வருடம் ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை அடுத்து, ஜம்மு காஷ்மீர் லடாக் மற்றும் ஜம்மு காஷ்மீர் என இரண்டு புதிய யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது.

புதிதாக பிரிக்கப்பட்ட யூனியன் பிரதேசங்களில் பல்வேறு நிர்வாக சீர்திருத்தங்களை மத்திய அரசு அறிமுகப்படுத்தி அமல்படுத்தி வந்த நிலையில் காவல்துறை மட்டும் பழைய ஒருங்கிணைந்த ஜம்மு காஷ்மீர் காவல்துறையாக இயங்கி வந்தது.

இந்த நிலையில் தற்போது லடாக் மாநிலத்திற்கு தனியாக புதிய காவல்துறை தோற்றுவிக்கப்பட்டு புதிய சின்னம் கொடி ஆகியவை வெளியிடப்பட்டுள்ளது.
லடாக் காவல்துறையின் குறிக்கோள்: சேவை மற்றும் தைரியம் ஆகும்.
லடாக் கிவல்துறை சின்னத்தில் அப்பகுதிக்கே உரிய பனிச்சிறுத்தை இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.