1 min read
நீர்-நில தாக்கும் சக்தியை பெருக்கும் கடற்படை-புதிய LCU L57 போர்க்கப்பல் படையில் சேர்ப்பு
லேன்டிங் கிராப்ட் யுடிலிடி மார்க் 4 வகை கப்பலான எல்சியு எல்57 என்ற புதிய கப்பல் கடற்படையில் இணைக்கப்பட்டுள்ளத.
மே 15 2020ல் படையில் இணைக்கப்பட்ட இந்த கப்பலை போர்ட் பிளேரில் நடைபெற்ற விழாவில் லெப்டினன்ட் ஜெனரல் பிஎஸ் ராஜேஸ்வர் அவர்கள் படையில் அதிகாரப்பூர்வமாக இணைத்தார்.
இந்தியா சொந்தமாக கப்பல் வடிவமைத்து கட்டி படையில் இணைக்க முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாய் இந்த ரக கப்பல்கள் உள்ளன.இது வரை ஏழு கப்பல்கள் கட்டப்பட்டு படையில் வெற்றிகரமாக இணைக்கப்பட்டுள்ளன.
டேங்குகள்,கவச வாகனங்கள் மற்றும் வீரர்களை கரைப்பகுதியில் தரையிறக்க பயன்படுத்தப்படும் இந்த கப்பல் மற்ற நாடுகளின் மீது போர் தொடுக்கும் போது அதிக அளவு பயன்படக்கூடியது ஆகும்.
கிட்டத்தட்ட 160 வீரர்கள் வரை கொண்டு சென்று தரையிறக்கும் ஆற்றல் கொண்டது.