
முன்தினம் 21ஆவது ராஷ்ட்ரிய ரைஃபிள்ஸ் பட்டாலியனுடைய கட்டளை அதிகாரிகள் கர்னல் அஷூதோஷ் ஷர்மா மற்றும் அவரது கம்பனி கமாண்டர் மேஜர் அனுஜ் ஸூத் மற்றும் இரண்டு வீரர்கள் வீரமரணமடைந்தனர்.
இதனையடுத்து 21ஆவது ராஷ்ட்ரிய ரைஃபிள்ஸ் படையணிக்கு புதிய தலைமையை தேர்வு செய்ய ராணுவ நிர்வாகம் முடிவு செய்ததது.
21ஆவது ராஷ்ட்ரிய ரைஃபிள்ஸ் “ப்ரிகேட் ஆஃப் கார்ட்ஸ்” ரெஜிமென்ட்டை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் வீரர்களால் ஆனது. இதனையடுத்து இந்த ரெஜிமென்ட்டின் மூத்த அதிகாரியும், தரைப்படையின் மத்திய கட்டளையக தளபதியுமான லெஃப்டினன்ட் ஜெனரல் இக்ருப் சிங் குமான் தனது அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பினார்.
ஒருவர் போனால் அந்த இடத்தை நிரப்ப பத்து பேர் வருவாராகள் எனும் கூற்றை போல
உடனடியாக கர்னல் பதவியில் உள்ள 7 ப்ரிகேட் ஆஃப் கார்ட்ஸ் ரெஜிமென்ட் அதிகாரிகள் தாமாகவே முன்வந்தனர். இவர்களில் தில்லியில் ராணுவ தலைமையகத்தில் மிக பாதுகாப்பான இடத்தில் பணியாற்றி வந்த கர்னல் ககன்தீப் சிங் மிகவும் ஆபத்தான காஷ்மீரின் புல்வாமாவில் பணியாற்ற முன்வந்த நிலையில் அவரை 21ஆவது ராஷ்ட்ரிய ரைஃபிள்ஸ் படையணியின் கட்டளை அதிகாரியாக ராணுவம் நியமித்து உள்ளது.
ப்ரிகேட் ஆஃப் கார்ட்ஸ் ரெஜிமென்ட்டின் 11ஆவது பட்டாலியனை சேர்ந்த அதிகாரியான கர்னல் ககன்தீப் சிங் 21ஆவது ராஷ்ட்ரிய ரைஃபிள்ஸ் பட்டாலியனை வழிநடத்துவார்.