Breaking News

காஷ்மீரில் ஊடுருவ தயாராக உள்ள 400 ஜெய்ஷ் பயங்கரவாதிகள் !!

  • Tamil Defense
  • May 6, 2020
  • Comments Off on காஷ்மீரில் ஊடுருவ தயாராக உள்ள 400 ஜெய்ஷ் பயங்கரவாதிகள் !!

ஜெய்ஷ் இ மொஹம்மது அமைப்பு ஆஃப்கானிஸ்தான் நாட்டில் உள்ள தனது பயிற்சி முகாம்களில் பயிற்சி பெற்ற சுமார் 400 பயங்கரவாதிகளை காஷ்மீரில் ஊடுருவ வைக்க தயாராக உள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளது.

கடந்த ஏப்ரல் 12ஆம் தேதி ஆஃப்கன் படைகள் தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கை ஒன்றில் பல ஜெய்ஷ் பயங்கரவாதிகளை ஒரு முகாமில் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர்.

அப்போது அங்கு பிடிப்பட்ட ஸரார் எனும் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தை பூர்வீகமாக கொண்ட பயங்கரவாதி எங்களை பாக் ராணுவம் பயிற்றுவித்து, ஆயுதம் அளித்து ஆதரவளித்து வருகிறது என வாக்குமூலம் அளித்துள்ளான்.

ஜெய்ஷ் பயங்கரவாதிகள் தலிபான்களுடன் இணைந்து கிழக்கு ஆஃப்கானிஸ்தானில் கோஸ்ட் முதல் ஜலாலாபாத் வரையும் , கந்தஹார் மாகாணத்தில் பாக் எல்லையோர பகுதிகளிலும் இணைந்து செயல்படுவதாக தகவல்கள் வருகின்றன.

மேற்குறிப்பிட்ட 2 நாட்கள் நடவடிக்கையில் ஆஃப்கானிஸ்தானில் ஜெய்ஷ் எந்தளவுக்கு ஊடுருவி உள்ளது என பாதுகாப்பு படையினருக்கு தெரிய வந்துள்ளது அதாவது இரண்டு டஜன் முகாம்களுக்கும் மேல் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேற்குறிப்பிட்ட நடவடிக்கையில் நகர்ஹார் மாகாணத்தில் உள்ள மொமந்த் தாரா மாவட்டத்தில் உள்ள கோரக் இ மொஹ்மாந்த் பகுதியில் உள்ள ஜெய்ஷ் முகாம் தாக்கப்பட்டது இதில் 14 ஜெய்ஷ் பயங்கரவாதிகள் கொல்லப்பட்ட நிலையில் மிகப்பெரிய அளிவிலான ஆயுத கிட்டங்கி அழிக்கப்பட்டது.