இந்தியப் பகுதிகளை இணைத்து புதிய வரைபடம் வெளியிடும் நேபாளம்

  • Tamil Defense
  • May 19, 2020
  • Comments Off on இந்தியப் பகுதிகளை இணைத்து புதிய வரைபடம் வெளியிடும் நேபாளம்

இந்தியாவுடனான பிரச்சனைக்குரிய பகுதிகள் என நேபாளம் நினைக்கும் லிபூலேஹ்,கலபனி மற்றும் லிம்பியுதுரா பகுதிகளை இணைத்து புதிய வரைபடத்தை நேபாளம் வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த பகுதிகள் இந்தியாவிற்கு சொந்தமானது ஆகும்.இருந்தும் நேபாளம் இவற்றை தனது பகுதிகள் என்று கூறி வருகிறது.

மகாகாளி ஆற்றுக்கு அருகே உள்ள நிலங்களை தங்களுக்கு சொந்தமானது என நேபாளம் கூறி வருகிறது.புதிய வரைபடத்தை அந்நாட்டின் கேபினட் கமிட்டிக்கு அளித்துள்ளார் நில மேலாண்னை அமைச்சர் பத்ம ஆர்யல்.இதற்கு அந்நாட்டின் கேபினட் கமிட்டியும் அனுமதி வழங்கியுள்ளது.இந்த புதிய மேப் விரைவில் வெளியிடப்படவுள்ளது.

லிபுலேக் வழியாக சமீபத்தில் சீன எல்லையை அடையும் சாலையை இந்தியா கட்டி திறந்த பிறகு இந்த பிரச்சனையை பெரிதாக்கியுள்ளது நேபாளம்.

இந்தியா தனது பகுதியில் தான் சாலை கட்டியதாக கூறிவருகிறது.சில நாட்களுக்கு முன் கூட நமது இராணுவ தளபதி சீனாவின் தூண்டுதலில் பேரின் தான் நேபாளம் இதைச் செய்கிறது என மறைமுகமாக விமர்சித்தார்.

.