Breaking News

சீனா நெருக்குதலில் இந்தியாவை எதிர்க்கும் நேபாளம்-இராணுவ தளபதி மறைமுக குற்றச்சாட்டு

  • Tamil Defense
  • May 16, 2020
  • Comments Off on சீனா நெருக்குதலில் இந்தியாவை எதிர்க்கும் நேபாளம்-இராணுவ தளபதி மறைமுக குற்றச்சாட்டு

உத்ரகண்டில் புதிதாக அமைத்துள்ள லிபுலேக்-தார்ச்சுலா சாலையை யாருடைய தூண்டுதலின் பேரிலேயோ நேபாளம் எதிர்க்கிறது என இந்திய இராணுவ தளபதி குற்றம் சாட்டியுள்ளார்.சீனாவை மறைமுகமாக சுட்டியே இந்த குற்றச்சாட்டை தளபதி பதிவு செய்துள்ளார்.

அந்த பகுதியில் இந்தியாவிற்கும் நேபாளத்திற்கும் இதுவரை பிரச்சனை நடந்ததில்லை எனவும் சாலை இந்திய எல்லைக்குள்ளாகவே தான் அமைக்கப்பட்டுள்ளது என தளபதி கூறியுள்ளார்.

காலி ஆற்றுக்கு கிழக்கு பக்கம் உள்ள பகுதி நேபாளத்திற்கே சொந்தம் என நேபாள் தூதர் கூறியுள்ளார்.அதில் எந்த பிரச்சனையும் இல்லை.ஆனால் சாலை மேற்கு பக்கமாக தான் அமைக்கப்பட்டுள்ளது என தளபதி கூறியுள்ளார்.

இதுவரை எந்த பிரச்சனையும் அங்கு ஏற்பட்டதில்லை.தற்போது யாருடைய தூண்டுதலின் பேரிலேயோ நேபாளம் பிரச்சனைக்கு உள்ளாக்கியுள்ளது என தளபதி கூறியுள்ளார்.

இந்த 80கிமீ முக்கியத்துவம் வாய்ந்த சாலை உத்ரகண்ட்டில் சீன எல்லையை ஒட்டிய பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது.இதை கடந்த வாரம் தான் பாதுகாப்பு அமைச்சர் திறந்து வைத்தார்.

தற்போது மேற்கு மற்றும் வடக்குபுறத்தில் இரு முனை போருக்கான சாத்தியம் உள்ளது.அவற்றிற்கு நாம் தயாராக இருத்தல் வேண்டும்.ஆனால் அனைத்து முரண்பாடுகளும் அப்படி ஒரு சூழ்நிலைக்கு இட்டு செல்லாது என அவர் கூறியுள்ளார்.

மேலும் “டூர் ஆப் டியூடி” குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு இளைஞர்கள் இந்திய இராணுவத்தில் பணிபுரிய விரும்புகின்றனர்.நிரந்தரமாக இல்லாமல் இராணுவ வாழ்க்கையை ஒருமுறையேனும் அனுபவிக்க விரும்புகின்றனர்.கல்லூரி மற்றும் பள்ளிகளில் இளைஞர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் அவர்கள் இதை தெரிவித்துள்ளனர்.அதனால் தான் மூன்றே வருட இராணுவ பணி என்ற கான்செப்டை கொண்டு வந்துள்ளோம் என அவர் கூறியுள்ளார்.