இந்தியப் பகுதிகளை இணைத்து புதிய மேப் வெளியிட இருந்த நேபாளம் பின்வாங்கியது ஏன் ?

புதிய மேப்பை சட்டமாக்க இன்று நேபாளம் முடிவெடுத்திருந்த வேளையில் அதிலிருந்து இன்று பின்வாங்கியுள்ளது.

நேபாளம் சில நாட்களுக்கு முன் இந்தியப் பகுதிகளை இணைத்து புதிய மேப் வெளியிட்டு அதை சட்டமாக்க உள்ளதாக அறிவித்திருந்தது.

நேபாள மன்றத்தில் இருந்து இந்த புதிய மேப் விவகாரம் தொடர்பான நிகழ்வு விலக்கப்பட்டதற்கு எந்தவிதமான காரணமும் இதுவரை வெளியாகவில்லை.

தற்போது இந்த நிகழ்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக நேபாள காங்கிரஸின் கிரிஷ்ன பிரசாத் தெரிவித்துள்ளார்.

‘Constitution of Nepal Second Amendment Bill 2077’ என்பதை நேபாள் சட்ட அமைச்சர் சிவமயா தும்பஹன்பெ வெளியிடுவதாய் இருந்தது.

இந்தியாவின் லிபுலேக்,கலபானி மற்றும் லிம்பியாதுரா ஆகிய பகுதிகளை இணைத்து புதிய மேப் ஒன்றை நேபாளம் வெளியிட்டிருந்தது.