தேவைப்பட்டால் எங்கள் இராணுவமும் போரிடும்: இந்தியாவிற்கு நேபாளம் எச்சரிக்கை

  • Tamil Defense
  • May 27, 2020
  • Comments Off on தேவைப்பட்டால் எங்கள் இராணுவமும் போரிடும்: இந்தியாவிற்கு நேபாளம் எச்சரிக்கை

இந்தியாவிற்காக போராடி உயிர்துறந்த கூர்கா வீரர்களின் தியாகத்தை இந்திய இராணுவ தளபதி கொச்சை படுத்தியுள்ளதாக நேபாள இராணுவ அமைச்சர் ஈஸ்வர் பொக்ரெல் கூறியுள்ளார்.

லிபுலேக் என்னுமிடத்தில் சாலை ஏற்படுத்தியுள்ளதாக இந்தியாவை கடுமையாக எதிர்த்து வருகிறது நேபாளம்.இதற்கு பதிலடி கொடுத்த இந்தியா லிபுலேக்கில் இந்திய எல்லைக்குள்ளாக தான் சாலை அமைக்கப்பட்டுள்ளதாக கூறியது.

இதற்கு பதிலடியாக நேபாளமும் லிபுலேக்,கலபனி மற்றும் லிம்பியாடுரா ஆகிய பகுதிகளை நேபாளத்துடன் இணைத்து புதிய வரைபடத்தை வெளியிட்டது.

இதற்கு பதிலடி கொடுத்த இந்திய இராணுவ தளபதி முகுந்த் நரவனே அவர்கள் யாருடைய தூண்டுதலின் பேரிலேயோ நேபாளம் இத்தகைய செயலை செய்கிறது எனவும் இது ஒரு அரசியல் நாடகம் எனவும் கூறினார்.

இதற்கு பதிலளித்த நேபாள இராணுவ அமைச்சர் ” இந்திய இராணுவ தளபதி எந்த அடிப்படையில் இத்தகைய தகவலை வெளியிட்டாலும் இது இந்தியாவிற்காக உயிர் துறந்த நேபாள் கூர்கா வீரர்களின் தியாகத்தை அவமதிப்பதாக அமைந்துள்ளது என கூறியுள்ளார்.கூர்கா படைகளுக்கு முன்னாள் அவர்கள் நிற்பது கடினம்.இராணுவ தளபதியின் கூற்று தான் அரசியல் நாடகம் போல உள்ளது” என கூறியுள்ளார்.

இந்தியா நேபாள பகுதிகளை திரும்ப அளிக்க வேண்டும் எனவும் அது பேச்சுவார்த்தைகள் மூலம் சாத்தியம் தான் எனவும் அவர் கூறியுள்ளார்.

அவரது கூற்றுக்கு இந்தியா எந்த பதிலும் அளிக்கவில்லை.