கடற்படை விமானங்கள் பணி இல்லையென்றால் விமானப்படையோடு பறக்கலாம்-விமானப்படை

மிக்-29கே போன்ற கடற்படை விமானங்கள் கடற்பகுதியில் பாதுகாப்பு பணியில் இல்லாவிட்டால் நாட்டின் பிற பகுதிகளில் விமானப்படையோடு இணைந்து செயல்படாம் என விமானப்படை தளபதி பதாரியா கூறியுள்ளார்.

ஆசியன் நியூஸ் இன்டர்நேசனல் செய்தி சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில் இந்த தகவலை விமானப்படை தளபதி பகிர்ந்துள்ளார்.

வடக்கு பகுதியா அல்லது மேற்கு எல்லையிலா இந்த விமானங்கள் நிலைநிறுத்தப்படும் என கேட்கப்பட்ட கேள்விக்கு இது குறித்து ஏற்கனவே ஒருங்கிணைந்த படை தளபதி கூறிவிட்டார் எனவும் நமது இலக்கை அடைவதற்கு ஏற்ப செயல்பாடுகள் அமையும் என தளபதி பதாரியா கூறியுள்ளார்.

தேவைப்படும் போது கடற்படை விமானங்கள் பாலைவன பகுதியில் நிலைநிறுத்தப்படும் என தளபதி ராவத் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.