காஷ்மீரில் பாதுகாப்பை பலப்படுத்துங்கள்; இராணுவம் மற்றும் துணை இராணுவத்திற்கு கட்டளை இட்ட பாதுகாப்பு ஆலோசகர் தோவல்

கடந்த சனியன்று காஷ்மீர் சென்று பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆராய்ந்த தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் முக்கிய இராணுவ கமாண்டர்கள் மற்றும் துணை இராணுவ கமாண்டர்களை பாதுகாப்பை பலப்படுத்த கூறியுள்ளார்.

அதே போல எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியிலும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும் கூறியுள்ளார்.

வடக்கு காஷ்மீரின் ஹேன்ட்வாரா,பாரமுல்லா மற்றும் சோபோர் பகுதிகளை சுற்றி வளைத்து அங்கு பாதுகாப்பு வளையத்தை தீவிரப்படுத்த கூறியுள்ளார்.இந்த வளையத்திற்குள் நடைபெற்ற என்கௌன்டர்களில் தான் நாம் கலோனல் உட்பட ஆறு வீரர்களை இழந்தோம்.

ஹிஸ்புல் பயங்கரவாத குழுவின் முக்கிய பயங்கரவாதியாக ரியாஸ் நைக்கூவை வீழ்த்தியதற்கு பாதுகாப்பு படைகளுக்கு தனது வாழ்த்துக்களை பதிவு செய்ததோடு கவனமாக செயல்பட வேண்டியதின் அவசியத்தை பகிரந்து கொண்டார்.

மே 11 அன்று துணை இராணுவ படைகள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்ற உளவுத் தகவல்களை அடுத்து பாதுகாப்பு படைகளும் உசார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.