அஜித் தோவல் அதிரடி, 22 பயங்கரவாதிகளை மியான்மர் ஒப்படைத்தது !!

  • Tamil Defense
  • May 17, 2020
  • Comments Off on அஜித் தோவல் அதிரடி, 22 பயங்கரவாதிகளை மியான்மர் ஒப்படைத்தது !!

நமது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் திரு அஜித் தோவல் இ.கா.ப அவர்கள் மற்றும் பாதுகாப்பு அமைப்புகளின் கடுமையான உழைப்பால் மியான்மர் அரசு 22வடகிழக்கு பயங்கரவாதிகளை ஒப்படைத்துள்ளது.

அஸ்லாம் மற்றும் மணிப்பூர் மாநிலங்களை சேர்ந்த இந்த பயங்கரவாதிகள் சிறப்பு விமானம் மூலமாக மணிப்பூர் மற்றும் அஸ்லாம் மாநிலங்களுக்கு கொண்டு வரப்பட்டு காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

கடந்த சில வருடங்களாக அதாவது சர்ஜிக்கல் தாக்குதல்களுக்கு பிறகு மியான்மர் அரசு பயங்கரவாதிகளை ஒழிப்பதற்கு நம் நாட்டிற்கு உதவி வருகிறது. நமது ராணுவத்துடன் இணைந்தும் அல்லது நமது உளவு தகவல்களின் பேரில் மியான்மர் ராணுவமும் பல்வேறு ஆபரேஷன்களை நடத்தி உள்ளது.

இந்த 22பயங்கரவாதிகளை மியான்மர் ராணுவம் சகாய்ங் பகுதிகளில் நடத்திய ஆபரேஷன் ஒன்றில் கைது செய்த நிலையில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தலைமையில் நமது பாதுகாப்பு அமைப்புகள் எடுத்த நடவடிக்கைகளால் இது சாத்தியமாகி உள்ளது.

22பயங்கரவாதிகளில் 12பேர் மணிப்பூர் மாநிலத்தையும், 10 பேர் அஸ்லாம் மாநிலத்தையும் சேர்ந்தவர்கள். இவர்களில் ராஜென் டய்மாரி, கேப்டன் ஸனடோம்பா நிங்தோஜாம், லெஃப்டினன்ட் பஷூராம் லெய்ஷ்ராம் ஆகிய முக்கிய பயங்கரவாதிகளும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானும் இப்படி செயல்பட்டால் பயங்கரவாதிகளை ஒழிக்க முடியும் இருதரப்பு உறவுகளும் மேம்படும் என மூத்த பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறினார்.