மேஜர் அனுஜ் அவர்களின் திருவுடல் முழு இராணுவ மரியாதையுடன் அடக்கம்

  • Tamil Defense
  • May 5, 2020
  • Comments Off on மேஜர் அனுஜ் அவர்களின் திருவுடல் முழு இராணுவ மரியாதையுடன் அடக்கம்

ஹேண்ட்வாரா என்கௌன்டரில் வீரமரணம் அடைந்த மேஜர் அனுஜ் அவர்களின் திருவுடல் இன்று முழு இராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

சந்திமந்திர் கமாண்ட் மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த அவரது திருவுடல் காலை பஞ்குலாவின் அமராவதி என்கிளேவில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

வளரும் போதே இராணுவத்தில் தான் இணைய வேண்டும் என்ற குறிக்கோளுடன் வளர்ந்தவர் மேஜர் என அவரது குடும்பத்தினர் கணணீர் மல்க கூறியுள்ளனர்.

வந்தே மாதரம், பாரத் மாதாகி ஜே மற்றும் மேஜர் அனுஜ் அமர் ராஹே என்ற முழக்கத்துடன் அவரது திருவுடலுக்கு இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.

முன்னாள் வீரர்கள் மற்றும் புணிபுரியும் வீரர்கள் பலர் இந்த இறுதி நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இராணுவ வீரர்களை தவிர குடும்பத்தார் மட்டுமே இறுதி நிகழ்வில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர்.

லெப் ஜென் ஜிசஸ் சங்கா, மேற்கு கட்டளையக தளபதி, மேஜர் ஜெனரல் பல்விந்தர் சிங், 11 கார்ப்ஸ் தளபதி,பிரிகேடியர் தேஜ்விர் சிங், ஸ்டேசன் கமாண்டா் , பிரிகேடியர் உப்கார் சிங்,37 வது இன்பான்ட்ரி பிரிகேடு தளபதி போன்ற இராணுவ அதிகாரிகளும் கலந்து கொண்டர்.

மேஜர் அனுஜ் அவர்கள் பிரைகேடு ஆப் கார்ட்ஸ் ரெஜிமென்டை சேர்ந்தவர் ஆவார்.தனது ரெஜிமென்ட் சார்பாக 21வது இராஷ்டீரிய ரைபிள்சில் பணியாற்றி வந்தார்.