
இராணுவத்திற்கான 156 இன்பான்ட்ரி காம்பாட் வாகனங்களை வாங்க மத்திய இராணுவ அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.
இதற்கான மேடக்கில் உள்ள இந்திய ஆர்டினன்ஸ் தொழில்சாலை தயாரிப்பான BMP-2/Sarath வாகனங்கள் வாங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த ரக வாகனங்களை சோவியத் யூனியன் அனுமதி பெற்று இந்தியா தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் தலைமுறை ,ஆம்பிபியஸ் இன்பான்ட்ரி காம்பட் வாகனமாக இது 1980களில் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது.அதன் பின் 1987 முதல் இந்தியா அனுமதி பெற்று தயாரித்து வருகிறது.
உலகின் 30க்கும் மேற்பட்ட நாடுகள் இந்த ரக வாகனங்களை உபயோகித்து வருகின்றன.ஆர்டினன்ஸ் பேக்டரி மேடக் இது வரை 1250க்கும் மேற்பட்ட BMP-2 வாகனங்களை இந்திய இராணுவத்திற்கு தயாரித்து வழங்கியுள்ளது.