114 நடுத்தர பல்திறன் போர் விமான ஒப்பந்தம் தேஜஸிற்காக ரத்து செய்யப்படுமா ??

  • Tamil Defense
  • May 17, 2020
  • Comments Off on 114 நடுத்தர பல்திறன் போர் விமான ஒப்பந்தம் தேஜஸிற்காக ரத்து செய்யப்படுமா ??

கூட்டுபடைகள் தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத் வியாழக்கிழமை அளித்த பேட்டியில் இந்திய விமானப்படை வெளிநாட்டு விமான இறக்குமதியை ரத்து செய்து விட்டு இலகுரக தேஜாஸ் விமானத்தை வாங்கும் என தெரிவித்தார்.

மீக நீண்ட காலமாக இந்திய விமானப்படைக்கு நடுத்தர பல்திறன் கொண்ட போர்விமானம் வாங்க முயற்சி செய்து தற்போது தேடுதல் நடைபெற்று வருகிறது.

இதற்கு அமெரிக்காவின் லாக்ஹீட் மார்ட்டின் தனது எஃப்16 ப்ளாக்70, போயிங் எஃப்18, எஃப்21, ஃபிரான்ஸின் டஸ்ஸால்ட் ரஃபேல், யூரோஃபைட்டர் டைஃபூன் போன்ற விமானங்கள் போட்டியில் உள்ளன.
இவை அனைத்துமே நடுத்தர பல்திறன் போர் விமானங்கள் ஆகும்.

ஆனால் தற்போது உள்நாட்டு தயாரிப்புகளை ஊக்குவிக்கும் வகையிலும் பணச்செலவை குறைக்கும் வகையிலும் இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டு இலகுரக தேஜஸ் விமானத்தை வாங்க இந்திய விமானப்படை முடிவு செய்துள்ளதாக கூட்டு படைகள் தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத் தெரிவித்தார்.

இதை நாம் அதிகளவில் படையில் இணைக்கும் போது இதன்மூலம் நம்பிக்கை அதிகரித்து ஏற்றுமதிக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் என்றார்.

ஆனால் இதில் ஒரு சிக்கல் உள்ளது மாலை இதன் தொடர்ச்சி பதிவில் அதை பற்றி காணலாம்.

மாலை 6 மணிக்கு தொடர்ச்சி…