மே 8,2020 அன்று காலை 10:45 மணிக்கு விமானப்படைக்குச் சொந்தமான ஒரு மிக்-29 விமானம் தினசரி பயிற்சி பணிக்காக வானில் பறந்தது.
பஞ்சாபின் ஜலந்தர் அருகே பறந்து கொண்டிருந்தபோது விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது.
பறந்துகொண்டிருக்கும் போதே விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட விமானியால் விமானத்தை கட்டுப்படுத்த இயலாமல் போனது.
இதனால் விமானத்தில் இருந்து விமானி வெளியேறினார்.வெளியேறிய விமானியை பத்திரமாக வானூர்தி மூலம் விமானப்படை மீட்டுள்ளது.
விபத்து தொடர்பாக தற்போது விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.