மேஜர் சோனம் வாங்க்சக் -கார்கிலின் முதல் வெற்றியை தேடி தந்த வீரர்

  • Tamil Defense
  • May 31, 2020
  • Comments Off on மேஜர் சோனம் வாங்க்சக் -கார்கிலின் முதல் வெற்றியை தேடி தந்த வீரர்

மிக அமைதியாக பேசுபவர்.முகத்தில் எப்போதும் புன்னகை பூத்திருக்கும்.லடாக் பிராந்தியத்தில் இத்தகைய குணத்துடன் மிக தைரியம் மற்றும் தேர்ந்த தலைமைத்துவத்தின் அடையாளமாக திகழ்பவர் தான் மேஜர் சோனம்.

மேஜர் சோனம் மற்றும் அவரது 30 வீரர்கள் கார்கில் போரில் எந்தவித ஆர்டில்லரி உதவியும் இல்லாமல் இந்தியாவிற்கு முதல் வெற்றியை தேடித் தந்தனர்.வெற்றி எளிதானதல்ல.
சில பல சோதனைகளை கடந்து உறுதியுடன் போரிட்டாலே அது சாத்தியம்.ஒரு குண்டு தலையில் பாய்ந்தால் நாம் மரணம் கொள்வது நமக்கே தெரியாத நிலை எனும்போது மன தைரியம் இருந்தால் மட்டுமே அந்த வெற்றியை நீங்கள் உங்களுக்கு அடிபணியச் செய்ய முடியும்.

தமிழில் வெளிவராத பெரும்பாலும் யாரும் அறிந்திராத மறக்கப்பட்ட சம்பவத்தின் கதை இது.

ஒரு அதிகாரியான் கடினமான உள்ளத்தையும் மென்மையான வெளிப்புறத்தையும் வெளிப்படுத்திய உண்மை சம்பவம்.

1999ல்  சோனம் அவர்கள் இந்திய இராணுவத்தின் லடாக் ஸ்கௌட்டில் மேஜராக பதவி வகித்தார்.” பனி போராளிகள்” அல்லது “பனி புலிகள்” என அறியப்பட்ட இந்த படைப் பிரிவு மலைசார் போர்முறைகளில் ஆகச் சிறந்தது.

அந்த பகுதி மலைப்பகுதிகள் குறித்து அவர்கள் நன்கு அறிந்திருந்தனர்.உயர்மலைப் பகுதியில் பணிபுரியும் இராணுவத்திற்காக லடாக் ஸ்கௌட் வீரர்கள் கண்காணிப்பு,ரோந்து மற்றும் மலைப் பகுதிகளில் கண்காணிப்பு நிலைகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

மே 26,1999 மேஜர் சோனம் வாங்க்சக் அவர்கள் வருடாந்திர விடுமுறைக்மக லே-யில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றிருந்தார்.உடனேயே அவர் பணிக்கு திரும்ப அவருக்கு கட்டளை பிறந்தது.ஜீன் 11 தன் மகனின் பிறந்தநாளில் கண்டிப்பாக கலந்து கொள்வதாக உறுதியளித்துவிட்டு களம் சென்றார் மேஜர்.

இரு நாட்களுக்கு பிறகு மேஜர் படாலிக் துணை செக்டாரான சோர்பட் லா-வில் உள்ள எல்லை பாதுகாப்பு படை கேம்பில் ரிபோர்ட் அளித்தார்.இந்த கேம்ப் எல்லை கட்டுப்பாட்டு கோட்டின் கடைசி நிலை.இங்கிருந்து தான் வீரர்கள் கண்காணிப்பு பணிகாகாக மலைப் பகுதிக்கு ரோந்து அனுப்பப்பட்டு வந்தனர்.
மேஜர் வாங்க்சக் அவர்களுக்கு அந்த பிராந்தியம் நன்கு தெரியும்.உயர் மலைப்பகுதியில் கண்காணிப்பு நிலை அமைத்து கண்காணிக்குமாறு அவருக்கு பணி வழங்கப்பட்டது.

அந்த நேரத்தில் இந்திய இராணுவத்திற்கு பாகிஸ்தான் ஊடுருவல் குறித்த தகவல் பெரும்பாலும் கிடைக்கவில்லை.இது குறித்து மேஜரின் படைப் பிரிவும் அறிந்திருக்கவில்லை.மேலே பாகிஸ்தானியர்கள் இருப்பதை அறியாமலேயே மேஜரும் அவரது 30 வீரர்களும் 18,000அடி உயர ரிட்ஜில் கண்காணிப்பு நிலை அமைக்க அவர்கள் கிளம்பினர்.

கிட்டத்தட்ட செங்குத்தான நிலை.அதாவது 80டிகிரி சரிவு.கண்ணாடி போன்ற உறைபனி,வழுக்கும் தன்மையுடன் மிக கடினமான மலை.நல்ல தேர்ந்த மலைஏறி கூட இது போன்ற உறைபனியுடன் கூடிய சப்ஜீரோ வெப்பநிலையில் மலையேறி செல்வது கடினம் தான்.

மேஜர் வாங்க்சக் அவர்கள் படை மலையேறிச் செல்லும் போது முகட்டுவாட்டு பக்கத்தில் இருந்து பாகிஸ்தானியர் நமது வீரர்களை சுடத் தொடங்கினர்.இந்த கடுமையான மோர்ட்டார் தாக்குதலில் லடாக் ஸ்கௌட்டின்
NCO வீரமரணம் அடைந்தார்.அவரின் உடலை திரும்ப எடுத்து செல்லவும்,தளத்திற்கு இந்த தாக்குதல் குறித்து தகவல் கொடுக்கவும் ஒரு ஜவானை விட்டு விட்டு மற்ற வீரர்கள் தொடர்ந்து மலையற தொடங்கினர்.பாகிஸ்தானிகள் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு இடத்தை அடைந்துவிடும் முன் அவர்களை தடுப்பது அவசியம் என்பதை மேஜர் வாங்க்சக் அறிந்திருந்தார்.

பாகிஸ்தானியர்கள் பக்கவாட்டில் இருந்து தொடர்ந்து தாக்கியபோதும் கற்பாறைகளுக்கிடையே தவழ்ந்து முன்னேறினர் நமது வீரர்கள்.

வீரர்கள் மிக வேகமாக மேலேறேி கற்பாறைகளுக்கிடையே புகுந்து எதிரியை நோக்கி சென்று தாக்க தொடங்கினர்.மேஜர் வாங்க்சக் மற்றும் அவரது வீரர்கள் வெறும் மூன்று மணி நேரத்திற்குள்ளேயே மலைமுகட்டை அடைத்து எதிரி நகர்வை தடுத்து தாக்க தொடங்கினர்.

மலைக்கு பின்புறம் எல்லைக் கோட்டை தாண்டி பாகிஸ்தானிய பகுதி வழியாக நிறைய பாகிஸ்தானியர்கள் மலையேறி இந்திய எல்லைக்குள் வர முற்படுவதை மேஜர் வாங்க்சக் அவர்கள் கண்டார்.மேஜர் வாங்க்சக் பதில் தாக்குதல் நடத்த தொடங்கினார்.எதிரிகள் நம் தாக்கும் தூரத்திற்கு வரும் வரை பொறுத்திருக்க கூறிய மேஜர் வாங்க்சக் பாகிஸ்தானியர்கள் தாக்கும் தூரத்திற்குள் வந்ததும் பக்கவாட்டில் இருந்து வீரர்களை தாக்க ஆணையிட்டார்.இந்த தாக்குதலில் நான்கு எதிரிகள் வீழ்த்தப்பட ஆயுதங்கள் என சகலமும் கைப்பற்றப்பட்டது.

அடுத்த நாள் வாங்க்சக் மற்றும் அவரது வீரர்கள் சோர்பாத் வா ஆக்சிஸ் பகுதியில் இருந்த அனைத்து பாகிஸ்தானியர்களையும் வீழ்த்த தொடங்கினர்.குறைந்த நேரத் திட்டத்துடன் நமது வீரர்கள் படை சிறப்பாக செயல்பட்டது.முன்னனியில் போரிட்ட மற்ற பிரிவுகள் போல் அல்லாமல் இந்த லடாக் படை 18,000அடி உயரத்தில் எந்தவித ஆர்டில்லரி உதவியும் இல்லாமலேயே தனது ஆபத்தான நடவடிக்கையை நடத்தியது.அங்கு நம்மை போன்றோர் மூச்சுவிடுவது கூடசிரமமே.அந்த எல்லைக் கோட்டு பகுதி இந்திய கட்டுப்பாட்டில் மீண்டும் வந்த போது லடாக் ஸ்கௌட்டின் போர்க்குரல்  Ki Ki So So Lhargyalo (The Gods will Triumph) அந்த மலை முழுதும் எதிரொளித்தது.

வயர்லெஸ் தொடர்பு தவிர மற்ற உலகத்துடனான தொடர்ப்பு இல்லை.குறைந்த அளவே கையிருப்பிருந்த உணவு.இருந்தும் மேஜர் வாங்க்சக் மற்றும் அவரது வீரர்கள் உலகின் மிக கடுமையான போரை வென்றனர்.கிட்டத்தட்ட ஒரு வார காலம் போரிட்ட அவர்கள் முக்கிய ஊடுருவும் பகுதியை கட்டுப்படுத்தியது மட்டுமல்லாமல் பாகிஸ்தானியர் கைப்பற்ற நினைத்த முக்கிய இடமும் இந்தியாவிற்கே திருப்பி கிடைத்தது.

கிட்டதட்ட அப்போது தான் கார்கில் போரே ஆரம்பித்திருந்தது.அந்த நேரத்திலேயே படாலிக் செக்டாரில் மிகத் தேவையான ஒரு வெற்றியை மேஜர் வாங்க்சக் அவர்கள் உறுதிசெய்திருந்தார்.

இந்த அற்பணிப்பு உணர்வு காரணமாக கார்கில் போரிலேயே முதன் முறையாக தலைமை தளபதியான வேத் பிரகாஷ் மாலிக் அவர்களிம் கமென்டேஷன் பெற்றார்.

மேலும் அவரது வீரதீரம் மற்றும் தலைமைப் பண்பு காரணமாக அவருக்கு மகாவீர்சக்ரா விருது வழங்கப்பட்டது.

மேஜர் சோனம் அவர்கள் உண்மையில் ஒரு போரை எதிர்பார்த்து செல்லவில்லை.அவரிம் தேவையான குண்டுகளும் இருக்கவில்லை.ஆனால் இது எதுவுமே அவர் இந்திய தேசத்தை பாதுகாப்பதை தடுக்கவில்லை.தன்னிடம் உள்ள அனைத்தையும் கொண்டு போரிட்ட அவர்கள் முதல் வெற்றியை இராணுவத்திற்கு தேடி தந்தார்.

கலோனலாக படையில் இருந்து ஓய்வு பெற்ற சோனம் அவர்கள் தற்போது அமைதியாக தன்வாழ்வை தொடர்கிறார்.

வீரவணக்கம்