
மஹிந்த்ரா நிறுவனம் பாதுகாப்பு படைகளுக்கு பல்வேறு தயாரிப்புகளை உருவாக்கி உள்ளது.
அதில் ஒன்று தான் மஹிந்த்ரா இலகுரக சிறப்பு கவச வாகனம். இந்த வாகனம் ஸ்டனாக் இரண்டாம் கட்ட பாதுகாப்பை அளிக்கிறது அதாவது 30மீ தொலைவில் இருந்து சுடப்படும் 7.62 தோட்டாக்கள், 6கிலோ வெடிபோருள் தாக்குதல், 80மீ தொலைவில் வெடிக்கும் 155மிமீ உயர்திறன் வெடிபோருள் நிரம்பிய பிரங்கி குண்டு ஆகியவற்றில் இருந்து பாதுகாப்பு அளிக்கும். மேலும் பி7 ரக பாதுகாப்பும் அளிக்கிறது அதாவது கனரக துப்பாக்கிகள் மற்றும் ஸ்னைப்பர் தோட்டாக்களையும் தடுக்கும் ஆற்றல் கொண்டது. இது வீரர்களுக்கு நாலாபுறமும் பாதுகாப்பு அளிக்கும்.
இந்த வாகனம் 1000கிலோ எடையை சுமக்கும் திறன் கொண்டது, 50கிமீ தொலைவுக்கு காற்றில்லாத டயர்களில் பயணிக்க கூடியது, 120கிமீ அதிகப்பட்ச வேகம், 30டிகிரி கோணத்தில் முழு சுமையுடனும் நிற்கும் திறன் கொண்டதாகும்.
டயர்களில் காற்று நிரப்பும் வசதி, ஜி.பி.எஸ், தானியங்கி கிரனேட் லாஞ்சர், நடுத்தர இயந்திர துப்பாக்கி பொருத்தி கொள்ளும் வசதி உள்ளிட்ட பல வசதிகளை கொண்டுள்ளது.
இந்த வாகனம் காஷ்மீர் போன்ற அதிக பதட்டம் நிலவும் இடங்களில் ரோந்து பணி மேற்கொள்ளவும்,சிறப்பு படைகள், உடனடி எதிர்வினை நடவடிக்கைகள் மற்றும் வழக்கமான நடவடிக்கைகளுக்கு ஏற்றதாகும்.
மேலும் அதிரடி தாக்குதல்கள், உளவு மற்றும் கண்காணிப்பு, எல்லை பாதுகாப்பு ஆகியவற்றிற்கும் ஏற்றது.