
ஹேண்ட்வாரா என்கௌன்டரில் வீரமரணம் அடைந்த லான்ஸ் நாய்க் தினேஷ் சிங் அவர்களின் திருவுடல் இன்று முழு இராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
அல்மோரா மாவட்டத்தில் அவரது கிரமமான மிர்கானில் அவரது திருவுடல் அடக்கம் செய்யப்பட்டது.
ஹேன்ட்வாராவில் பாக் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படைகளுக்கும் நடந்த மோதலில் ஐந்து வீரர்கள் வீரமரணம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.
அந்த தாக்குதலில் பாக்கின் முக்கிய லஷ்கர் கமாண்டர் ஹைதர் உட்பட இரு பயங்கரவாதிகள் இந்த என்கௌன்டரில் கொல்லப்பட்டனர்.பயங்கரவாதிகளிடம் மாட்டிக்கொண்ட பொதுமக்கள் விடுவிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.