ரோந்து சென்ற பாதுகாப்பு படை வீரர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்-வீரர் உயிரிழப்பு

  • Tamil Defense
  • May 22, 2020
  • Comments Off on ரோந்து சென்ற பாதுகாப்பு படை வீரர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்-வீரர் உயிரிழப்பு

ரோந்து சென்ற பாதுகாப்பு படை வீரர்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய கோழைத்தனமான தாக்குதலில் காஷ்மீர் காவல்துறை வீரர் உயிரிழந்தார்.

காஷ்மீர் காவல் துறை வீரர் அனூப் சிங் அவர்கள் இந்த தாக்குதலில் வீரமரணம் அடைந்தார்.

புல்வாமாவின் பிரிச்சூ பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த போது இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

இந்த தாக்குதலில் மத்திய ரிசர்வ் காவல் படை வீரர் ஒருவரும் காயமடைந்தார்.

வீரவணக்கம்