இந்தியாவிற்கு எதிராக ஜிகாத்தா!! மறுத்த தாலிபன்கள்

  • Tamil Defense
  • May 19, 2020
  • Comments Off on இந்தியாவிற்கு எதிராக ஜிகாத்தா!! மறுத்த தாலிபன்கள்

காஷ்மீர் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் எனவும் இந்தியாவை குறிவைத்து தாக்க எந்த திட்டமும் இல்லை என தாலிபன்கள் மறுத்துள்ளனர்.

பாக் ஆதரவு பயங்கரவாதிகளுடன் இணைந்து தாலிபன்கள் இந்தியாவில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவியதை அடுத்த தாலிபன்கள் இந்த தகவலை வெளியிட்டுள்ளனர்.

காஷ்மீரில் ஜிகாத் செய்யவுள்ளதாக வெளியான தகவல் தவறானது.காஷ்மீர் இந்தியாவின் உள்நாட்டு பிரச்சனை என தாலிபன்களின் அரசியல் பிரிவான இஸ்லாமிக் எமிரேட்சின் செய்திதொடர்பாளர் சுஹைல் ஷகீன் தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் பிரச்சனை முடியாத வரை இந்தியாவுடன் நட்பாக இருக்க முடியாது என தாலிபன் செய்தி தொடர்பாளர் சபியுள்ள பேசியதாக மீடியா முழுதும் வைரல் ஆனது.தாலிபன்கள் ஆப்கனை கைப்பற்றிய பிறகு காஷ்மீரை கைப்பற்றுவோம் என பேசியதாகவும் தகவல்கள் பரவியது.

இவை அனைத்தும் போலியான தகவல்கள் என இந்தியா மறுத்துள்ளது.