
மே 10,1980 உத்திரப் பிரதேசத்தின் அகிர் என்ற கிராமத்தில் பிறந்தார் சுபேதார் மேஜர் யோகிந்திர யாதவ்.அவரது அப்பாவும் ஒரு இராணுவ வீரர் தான்.அவருடைய அப்பா கரன்சிங் யாதவ் குமாஒன் ரெஜிமென்டில் இணைந்து 1965 மற்றும் 1971 போரில் பங்கேற்றவர்.யோகேந்திர சிங் தனது 16வது வயதில் இந்திய இராணுவத்தின் கிரேனாடியர் ரெஜிமென்டில் இணைந்தார்.
யோகேந்திர சிங் 18வது கிரேனாடியரின் கடக் பிளாட்டூன் கமாண்டோ பிரிவில் இணைந்தார்.
கிரெனெடியர் வீரர் யோகேந்திர யாதவ், டைகர் ஹில்ஸ் எனும் மலைபகுதில் இருந்த மூன்று எதிரி பங்கர்களை கைப்பற்ற ஜூலை 3- 4, 1999 ஆண்டு சென்றார். மலைபகுதி மிகவும் சரிவாகவும், பனிபடர்ந்ததாகவும் இருந்தது. அத்தகைய பாதையில் தன் படையினருக்காக மலைமுகட்டில் கயிறுகளை கட்டும் பணியை முன்வந்து ஏற்றுக்கொண்டார் யோகேந்திரசிங் யாதவ்.மேலே தவழ்ந்து ஏறும் போது அதை கவனித்த பாகிஸ்தானியர்கள் கீழே இருந்த வீரர்கள் மீது இயந்திர துப்பாக்கியால் சராமாரி சுட்டனர். இந்த தாக்குதலில் காடக் பிளட்டூனின் கமான்டர் உள்ளிட்ட மேலும் இரு வீரர்கள் வீரமரணம் அடைந்தார்கள். ஒட்டுமொத்த இந்திய ராணுவ தாக்குதலும் தோல்வி அடைந்து முடங்கும் நிலை உருவானது.யோகேந்திர யாதவ் அவர்களின் இடுப்பிலும் தோள்பட்டையிலும் மூன்று தோட்டாக்கள பாய்ந்தன.நன்றாக கவனிக்கவும் அப்போது யோகேந்திர யாதவிற்கு வெறும் 19வயது தான்.
அவர் துவண்டு போகவில்லை, குண்டு காயத்துடன் மீதமிருந்த 60அடியையும் தாண்டி முகட்டில் மீது ஏறினார்.கடும் காயம்,இரத்தம் ஓடுகிறது.அவர் பொருட்படுத்தவில்லை.
யோகேந்திரசிங் யாதவ் சாமர்த்தியமாக தவழ்ந்தே குண்டு மழைக்கு நடுவேயும் தனி ஒருவராக முன்னேறி சென்று முதல் பாக் பங்கரில் கிரெனைடுகளை வீசி ,நாலு பாகிஸ்தானியரை கொன்று பங்கரை கைப்பற்றினார்.
இதனால் மற்ற படையினரும் மேலே வந்து மற்ற பங்கர்களை தாக்க முடிந்தது.யோகேந்திர யாதவ் மற்றும் மேலும் இரு வீரர்கள் இணைந்து இரண்டாவது பங்கரை நோக்கி முன்னேறி தாக்கி அங்கு பாகிஸ்தானியர்களுடன் கையால் போரிட்டனர்.அதில் நான்கு பாகிஸ்தானியர்கள் கொல்லப்பட்டனர்.
பிளாட்டூன் வெற்றிகரமாக டைகர் ஹில் பகுதியை கைப்பற்றியது.
இந்த தாக்குதலில் யோகேந்திர யாதவ் கொல்லப்பட்டதாக நினைத்து அரசு அவர் வீரமரணத்திற்கு பிறகு பரம் வீர சக்ரா பெறுவதாக அறிவித்தது.ஆனால் அப்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததை யாரும் அறிந்திருக்கவில்லை.
அவரது உடம்பில் கிட்டத்தட்ட 15 தோட்டாக்கள் பதிந்திருந்தது.அவர் படுக்கையில் இருக்கும் போது அவருக்கு பரம்வீர் சக்ரா அறிவிக்கப்பட்ட செய்தி கிடைத்தது.அவரது அப்பா தான் அவருடைய விருதை வாங்கினார்.அதன் பின்னர் தான் அவர் உயிருடன் இருந்த விசயம் வெளியே தெரிந்தது.
இளவயதிலேய பரம்வீர் சக்ரா பெற்ற வீரர் என்ற பெருமையும் அவருக்கு உண்டு.அவர் பரம் வீர் சக்ரா விருது பெற்ற போது வயது வெறும் 19 தான்.
தற்போது உயிருடன் உள்ள மூன்று பரம் வீர் சக்ரா வாங்கிய வீரர்களுள் இவரும் ஒருவர்.