இந்தியா-ஜப்பான் கூட்டுப்பயிற்சியை நிறுத்திய ஜப்பான் ; இந்தோ பசிபிக் பகுதியில் தனது ஆதிக்கத்தை அதிகரிக்கும் சீனா

  • Tamil Defense
  • May 12, 2020
  • Comments Off on இந்தியா-ஜப்பான் கூட்டுப்பயிற்சியை நிறுத்திய ஜப்பான் ; இந்தோ பசிபிக் பகுதியில் தனது ஆதிக்கத்தை அதிகரிக்கும் சீனா

ஜப்பானில் நடைபெறுவதாய் இருந்த இந்தியா-ஜப்பான் வான் படைகளின் கூட்டுப்பயிற்சி நிறுத்தப்படுவதாக ஜப்பான் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.

கடந்த நவம்பர் 2019ல் ஜப்பானுடன் 2+2 பேச்சுவார்த்தைக்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டது.

இருந்தாலும் இரு நாடுகளும் பாதுகாப்பு சார் பகுதிகளில் இணைந்து செயல்படவும், இரு நாடுகளுக்கு இடையேயான உறவை வலிமைப்படுத்தவும் முடிவு செய்துள்ளன.திறந்த இந்தோ-பசிபிக் கடற்பகுதி என்ற கொள்கையில் இரு நாடுகளும் ஒரே மனநிலையைக் கொண்டுள்ளன.

கடந்த வாரம் ஜப்பானின் பாதுகாப்பு அமைச்சர் டாரோ கோனோ இந்தியப் பாதுகாப்பு அமைச்சரை போனில் தொடர்பு கொண்டு உரையாடினார்.

இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீனாவின் ஆதிக்கம் அதிகரிக்க தொடங்கியது முதல் கடந்த இரு வருடத்தில் இரு நாடுகளும் தங்களது பாதுகாப்பு சார் உறவுகளை வலிமைப்படுத்தியுள்ளன.

அதே போல் இந்தோ-பசிபிக்கில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருவதால் இந்தியாவின் உறவையும் ஜப்பான் வேண்டுகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கொள்ளையர்கள் எதிர்ப்பு நடவடிக்கை என்ற பெயரில் ஒரு கடற்படை பிரிவை இந்தியப் பெருங்கடலுக்கு அனுப்பியது சீனா.அதில் ஒரு அணுசக்தி நீர்மூழ்கியும் அடக்கம்.

மறுபுறம் இந்த கொரானா வேளையிலும் சீனா தென் சீனக் கடலில் தனது இராணுவம் சார நடவடிக்கைகளை அதிகப்படுத்தி உள்ளது.தென்சீனக்கடலில் பெரும்பாலான பகுதிகளை சீனா சொந்தம் கொண்டாடி வரும் வேளையில் அமெரிக்கா மற்றும் இந்தியக் கடற்படைகள் “சுதந்திரமான கடல்பயணம்” என்ற பெயரில் தொடர்ந்து அந்த பகுதிகளுக்குள் போர்க்கப்பலை இயக்கி வருகின்றன.

கடந்த வாரம் அமெரிக்கா தனது மொன்ட்கோமேரி மற்றும் சீசர் சாவெஸ் என்ற இரு கப்பல்களை தென்சீனக் கடலுக்கு அனுப்பியது.

இந்திய-திபத் எல்லையிலும் இராணுவ நடவடிக்கைகளை அதிகப்படுத்தியுள்ள சீனா இந்திய வீரர்களுடன் இருமுறை கைகலப்பில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.