400 சிஆர்பிஎப் வீரர்களுக்கு குறிவைத்த ஜெய்ஸ் பயங்கரவாதிகள்-முறியடித்த வீரர்கள்
இன்று (வியாழன்) புல்வாமாவில் கண்ணிவெடி நிறைந்த கார் ஒன்றை வீரர்கள் கண்டறந்து அதில் இருந்த கண்ணிவெடிகளை பத்திரமாக வெடிக்கச்செய்து மற்றும் ஒரு புல்வாமா போன்ற தாக்குதலை வீரர்கள் தடுத்துள்ளனர்.20 வாகனங்களில் சென்ற 400 சிஆர்பிஎப் வீரர்களை குறிவைத்து தாக்க ஜெய்ஸ் பயங்கரவாதிகள் முயன்றுள்ளனர்.
இந்த 20 வாகனங்களும் ஸ்ரீநகரில் இருந்து ஜம்முவுக்கு செல்லும் வழியில் தான் இந்த கார் நமதுவீரர்களால் கண்டறியப்பட்டுள்ளது.
பக்ஷி ஸ்டேடியத்தில் இருந்து 7 மணிக்கு வீரர்கள் குழு கிளம்பியிருக்க வேண்டும்.அவர்கள் ஜம்முவை நோக்கி செல்வது தான் திட்டம்.அனைத்து ரேங்க் சிஆர்பிஎப் வீரர்கள் என 400 வீரர்கள் தயாராக இருந்தனர்.இந்த குழவை குறிவைத்து தான் சான்ட்ரோ ரக காரை பயங்கரவாதிகள் தயார் செய்திருந்தனர்.ஆனால் நமது வீரர்கள் வெற்றிகரமாக இந்த சம்பவத்தை தடுத்துள்ளனர்.
இரு நாட்களுக்கு முன்னரே இதுபற்றியான உளவுத் தகவல் நமது படைகளுக்கு கிடைத்துள்ளது.அப்போது முதலே நமது வீரர்கள் மிகுந்த எச்சரிக்கையோடு செயல்பட்டுவந்தனர்.
ஏற்கனவே 2019ல் இதே போன்ற ஒரு தாக்குதல் புல்வாமாவில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.