இந்திய எல்லைக்குள் இருமுறை ஊடுருவிய சீன வானூர்திகள்-கண்காணிப்பை அதிகப்படுத்தும் இந்தோ திபத் காவல் படை
ஏப்ரல் மற்றும் மே-ல் இரு முறை இந்திய எல்லைக்குள் சீன இராணுவ வானூர்திகள் ஊடுருவியதை அடுத்து சீன எல்லைக்கு அருகே உள்ள ட்ரைப் கின்னார்,லாஹால் மற்றும் ஸ்பிடி மாவட்டங்களில் பாதுகாப்பு கண்காணிப்பை இந்தோ திபத் காவல் படை அதிகரித்துள்ளது.
ட்ரைபல் லாஹாலின் சும்டோ பகுதியிலும் மற்றும் ஸ்பிடி மாவட்டத்திலும் இரு முறை வானூர்திகள் தென்பட்டுள்ளன.இவை இரண்டு மாவட்டங்களும் சீன எல்லைக்கு அருகே உள்ளன.ஏப்ரல் 11 மற்றும் ஏப்ரல் 20 ஆகிய நாட்களில் வானூர்தி தென்பட்டுள்ளது.ஹிமாச்சல பிரதேசம் 260கிமீ அளவு சீனாவுடன் எல்லையை பகிரந்து கொள்கிறது.இதில் ட்ரைபல் கின்னார் மாவட்டம் மட்டும் 140கீமீ விரிந்துள்ளது.அதன் பின் ட்ரைபல் லாஹால் மாவட்டம் மற்றும் ஸ்பிடி மாவட்டம் 80கிமீ அளவு விரிந்துள்ளன.
இந்த பகுதிகளை மட்டும் ஐந்து பட்டாலியன் இந்தோ திபத் காவல்படை வீரர்கள் காவல் காக்கின்றனர்.இதில் 20 காவல் நிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.இதில் சும்தோவுக்கும் அப்பால் கௌரிக் என்ற கடைசி கிராமத்தில் உள்ள நிலையும் அடக்கம்.
லாகுமா,மொராங்,மோர்னி,டோக்ரி,ரிஷி டோக்ரி,டோம்டி மற்றும் நில்டஹ்லா பாஸ் ஆகிய இடங்களிலும் முக்கிய காவல் நிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.சீன ஊடுருவல்கள் அதிகரித்துள்ளதால் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக இன்ஸ்பெக்டர் ஜெனரல் (உளவு) டல்ஜீத் சிங் தாகூர் அவர்கள் கூறியுள்ளார்.
ஊடுருவல் சம்பவத்திற்கு பிறகு இந்தோ திபத் காவல்படையும் இராணுவமும் இணைந்து உளவு ரோந்து நடத்தி தற்போது பாதுகாப்புகளை அதிகரித்துள்ளன.ஏப்ரல் மே மாதங்களில் சீன வானூர்திகள் உளவு ரோந்து எப்போதும் நடத்தும் எனவும் இந்திய இராணுவ வானூர்திகளும் இதே போன்று உளவு ரோந்த நடத்தும் எனவும் கூறப்படுகிறது.
1962க்கு பிறகு இந்தியா சீன எல்லையில் எந்த ஒரு பெரிய போரும் நடைபெறாத நிலையில் லாஹால் மற்றும் ஸ்பிடி பகுதிகளுக்கு அந்தபக்கம் உள்ள சீனப்பகுதிகளில் சீனா தொடர்ச்சியாக இராணுவ கட்டுமானங்களை கட்டி பாதுகாப்பை பலப்படுத்தி வருகிறது.
போர் என்று வந்தால் இரு நாடுகளும் எல்லை முழுவதும் மோத முடியாது.காரணம் அது முழுதும் மலைப் பிரதேசங்கள்.கணவாய்கள் வழியாக தான் போரிட முடியும்.ஹிமாச்சலை பொறுத்தவரை ட்ருங்லா பள்ளத்தாக்கிற்கு முன்புள்ள கிமோகுல் கணவாய் மற்றும் சிம்தோங் கணவாய் வழியாக மட்டுமே படைகள் செலுத்த முடியும்.இதைக் கடந்தால் திபத்திற்குள் செல்ல முடியும்.
இதே போல நேசாங் பள்ளத்தாக்கில் உள்ள 5280மீ உயரம் உள்ள ரங்கியோ கணவாய் மற்றும் 5,320 கியோப்ரங்லா கணவாய்களை கடந்தால் திபத்திற்குள் செல்ல முடியும்.
அதே போல 5570மீ உயரத்தில் உள்ள யம்ரங்லா கணவாய் உள்ளது.அதன் பிறகு 5200மீ உயரத்தில் உள்ள சிப்கி லா கணவாய் உள்ளது.
இந்த சிப்கி லா கணவாய் வழியாக தான் இருநாட்டு வர்த்தகம் நடக்கிறது.