காஷ்மீரில் புல்வாமைவிடவும் மோசமான தற்கொலைப்படை தாக்குதல் உளவுத்துறை எச்சரிக்கை !!

  • Tamil Defense
  • May 4, 2020
  • Comments Off on காஷ்மீரில் புல்வாமைவிடவும் மோசமான தற்கொலைப்படை தாக்குதல் உளவுத்துறை எச்சரிக்கை !!

காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் தொடர்ந்து பயங்கரவாதிகளை கடுமையாக ஒடுக்கி வருவதால் பயங்கரவாத இயக்கங்கள் ஆத்திரத்திலும் விரக்தியிலும் உள்ளன.

இதனையடுத்து ஜெய்ஷ் இ மொஹம்மது இயக்கம் மே மாதம் 11ஆம் தேதி காஷ்மீரில் மிகப்பெரிய அளவில்தற்கொலைப்படை தாக்குதல் நடத்த திட்டம் வகுத்து உள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

உளவுத்துறை தகவல்கள் படி,
ஜெய்ஷ் இ மொஹம்மது முக்கிய தளபதிகளில் ஒருவனான முஃப்தி அப்துல் ரவூஃப் மற்றும் பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ அதிகாரிகள் இடையில் சமீபத்தில் நடந்த சந்திப்பில் இது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும், இதனை மேற்கொள்ள சுமார் 20-30 ஜெய்ஷ் இயக்க பயங்கரவாதிகள் ஊடுருவ தயாராக உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புல்வாமாவில் 40 மத்திய ரிசர்வ் காவல்படையினர் இத்தகைய தற்கொலை படை தாக்குதலில் தான் வீரமரணமடைந்தனர் என்பதும், அதற்கு இதே ஜெய்ஷ் இயக்கம் பொறுப்பேற்றதும் குறிப்பிடத்தக்கது