
இந்திய கடற்படைக்காக கொச்சி கப்பல் கட்டுமான தளத்தில் மிக நீண்ட காலமாக ஐ.என. எஸ் விக்ராந்த் எனும் விமானந்தாங்கி கப்பல் கட்டப்பட்டு வருகிறது.
இந்த கப்பலின் கட்டுமானம் மிக நீண்ட காலமாக நடைபெற்று வருகிறது, கடந்த 2009ஆம் ஆண்டு கட்டுமானம் தொடங்கிய இக்கப்பல் சுமார் 9ஆண்டுகள் கழித்து 2018ஆம் ஆண்டு தயாராகும் என எதிர்பார்க்ப்பட்டது இதுவே மிக நீண்ட காலமாகும். இதன் பின்னர் திரும்பவும் நீட்டிக்கப்பட்டு கட்டுமான பணிகள் தொடர்ந்த நிலையில் கப்பலின் முக்கிய கருவிகள் திருடப்பட்டன.
அதன் பின்னர் மீண்டும் பணிகள் தொடர்ந்த நிலையில் தற்போது மீண்டும் ஆறு மாதங்கள் தள்ளிப்போகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2021ஆம் ஆண்டு சோதனைகள் முடித்துவிட்டு முழு அளவில் செயல்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது 2022ஆம் ஆண்டு தான் முழு செயல்பாட்டுக்கு வரும் என தெரிகிறது, இதை தாண்டியும் காலதாமதம் ஆகும் வாய்ப்புகள் அதிகம்.
மறுபுறம் சீனா கப்பல்களை கட்டி குவித்து வருவதும் தென்சீன கடல் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதிகளில் தனது இருப்பை அதிகரித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.