தங்கு தடையின்றி 80நாட்கள் எந்த துறைமுகமும் செல்லாமல் கடலிலேயே இருந்த இந்திய கடற்படை கப்பல் !!

  • Tamil Defense
  • May 23, 2020
  • Comments Off on தங்கு தடையின்றி 80நாட்கள் எந்த துறைமுகமும் செல்லாமல் கடலிலேயே இருந்த இந்திய கடற்படை கப்பல் !!

கொரோனா தொற்று காரணமாக இந்திய கடற்படை கப்பல்கள் எந்த துறைமுகமும் செல்ல கூடாது என இந்திய கடற்படை உத்தரவு பிறப்பித்ததை அறிவோம்.

அந்த வகையில் ஏடன் வளைகுடா பகுதியில் கடற்கொள்ளையர்கள் கண்காணிப்பதற்காக அனுப்பி வைக்கப்பட்ட ஐ.என்.எஸ். சுனன்யா எனும் போர்க்கப்பல் 80 நாட்களாக எந்த துறைமுகமும் செல்லாமல் முழுக்க முழுக்க கடலிலேயே இயங்கி உள்ளது.

இது இந்திய கடற்படையின் நடவடிக்கை திறன் வளர்ச்சிக்கு சான்றாகும் காரணம் 30 முதல் 40 நாட்களுக்கு மேலாக கப்பல்களில் சப்ளை தீர்ந்து விடும் அப்போது நிச்சயமாக துறைமுகங்கள் சென்று சப்ளை நிரப்பினால் தான் தொடர்ந்து இயங்க முடியும்.

ஆனால் இந்திய கடற்படை தனது டாங்கர் கப்பல்கள் மூலமாக இந்த கப்பலுக்கு எரிபொருள், உணவு போன்ற சப்ளைகளை வழங்கி இதனை சாத்தியமாக்கி உள்ளது.

இத்தகைய திறன்கள் போர்க்காலத்தில் மிகவும் இன்றியமையாதது ஆகும் காரணம் களத்தில் முன்னனியில் உள்ள போர்க்கப்பல்களுக்கு ஆயுதம், உணவு, எரிபொருள் ஆகியவற்றை தொடர்ந்து சீராக வழங்கி படையை தொடர்ந்து செயல்பாட்டில் வைத்திருப்பது வெற்றிக்கு படித்தளமாக அமையும்.

தற்போது இந்த ஐ.என்.எஸ். சுனன்யா கப்பல் 80 நாட்களுக்கு பிறகு வெற்றிகரமாக கொச்சி கடற்படை தளத்திற்கு நேற்று வந்த நிலையில் கடற்படை அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர்.