
சென்னையை சேர்ந்த இந்திய வெளியுறவு அதிகாரி டி.எஸ். திருமூர்த்தி அவர்கள் ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
1985ஆம் ஆண்டு பணியில் இணைந்த அவர் எகிப்து, சுவிட்சர்லாந்து, இந்தோனேசியா, அமெரிக்கா, பாலஸ்தீனம் போன்ற நாடுகளிலும் வெளியுறவு அமைச்சகத்திலும் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். மேலும் இவர் ஒரு தேர்ந்த ராஜதந்திரியாக பார்க்கப்படுகிறார்.
கடந்த 2016ஆம் ஆண்டு முதல் இந்த பொறுப்பில் இருந்த திரு. சயத் அக்பருதீன் அவர்கள் ஒய்வு பெற உள்ளதையடுத்து இந்த நியமனம் குறித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.