ஐநா பாதுகாப்பு அவையில் இந்தியா நிரந்தர உறுப்பினர் ஆக விருப்பம்
ஐநா பாதுகாப்பு அவையில் இந்தியா நிரந்தர உறுப்பினராக அனைத்து தகுதிகளும் உள்ளதாக ஐநாவிற்கான இந்தியாவின் நிரந்தர தூதர் செய்து அக்பருதீன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் கொள்கைகளுள் இது எப்போதுமிருக்கும் எனவும் , அதற்கு தகுதியான ஒரு நாடாக இந்தியா இருப்பதை உணருகிறோம் என அவர் தெரிவித்துள்ளார்.
ஐநா பாதுகாப்பு அவையில் மாற்றம் கொண்டு வருவது இந்தியாவை மையப்படுத்தி மட்டுமல்ல எனவும் பல நாடுகள் அதற்கு ஆதரவாகவும் இந்தியா தகுதியான நாடுதான் எனவும் எண்ணுகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியா உலகின் மிகப் பெரிய மக்களாட்சி நாடு.பில்லியன் கணக்கில் மக்கள் வசிக்கும் நாடு.பில்லியன் மக்களும் மக்களாட்சியை நிலைநாட்டி அதற்கு ஒரு உதாரணமாகவும் திகழ்கின்றன என அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது செய்யது அக்பருதீன் அவர்கள் ஓய்வு பெற உள்ளார்.அடுத்த தூதராக தமிழகத்தின் திருமூர்த்தி அவர்கள் நியமிக்கப்பட உள்ளார்.
இரஷ்யா ,பிரேசில் போன்ற நாடுகள் இந்தியாவிற்கு ஆதரவு தெரிவித்தாலும் சீனா ஆதரவளிக்காது என்பது நாம் அறிந்ததே.மற்ற நிரந்தர நாடுகள் நான்கும் ஆதரவு அளித்தாலும் சீனா தனது வீட்டோ அதிகாரம் மூலம் அதை தடுக்கும்.